சீத்தல் சாத்தே

சீத்தல் சாத்தே மகாராட்டிராவின் புனேவைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகரும், கவிஞரும் மற்றும் தலித் உரிமை ஆர்வலரும் ஆவார். 2002 ஆம் ஆண்டின் குசராத்து கோத்ரா கலவரத்திற்குப் பிறகு வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்புவதற்காக புனேவில் உருவாக்கப்பட்ட கபீர் கலா மஞ்ச் என்ற அரசியல்-கலாச்சார குழுவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருந்து சாதி, பெண்கள், தலித்துகள், சாமியார்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும், அரசாங்கம், கார்ப்பரேட்டுகளின் பேராசை, நம் சமூகத்தின் பார்ப்பனிய சார்பு ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியும் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பரப்புரை செய்துள்ளார்.

ஆவணப்படம் தொகு

2007 ஆம் ஆண்டு ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்தன், கபீர் கலா மஞ்ச் நிகழ்ச்சிகளை படமாக்கி, 1997 ஆம் ஆண்டில் மும்பையின் ரமாபாய் நகரில் நடந்த காவல் கொலைகளிலிருந்து உருவான சாதி பதட்டங்கள் மற்றும் வன்முறைகள் பற்றிய திரைப்படமான ஜெய் பீம் காம்ரேட் என்ற ஆவணப்படத்திற்கான காட்சிகளை சேகரிக்கும் போது சாத்தேவை விரிவாக பேட்டி கண்டு, ஜெய் பீம் காம்ரேட் என்பதை இறுதியாக வெளியிடப்பட்டார். 2011ஆம் ஆண்டில், பட்வர்தனின் கூற்றுப்படி, "சீத்தலைப் போன்றவர்கள் மீண்டும் பொதுவெளியில் வந்து தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க முடியும், சக்தியற்றவர்களுக்காகப் பேசுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.[1] இந்தியாவைச் சுற்றியுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், சாத்தேவின் இசையையும் செய்தியையும் மகாராட்டிராவுக்கு வெளியே பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.[2]

வழக்கு தொகு

சாத்தே மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் மே 2011 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதிலிருந்து தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த சீத்தல் சாத்தே மற்றும் அவரது கணவர் சச்சின் மாலி இருவரும் ஏப்ரல் 2, 2013 அன்று மும்பையில் உள்ள விதான் பவனுக்கு வெளியே தலித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் பிறர் முன்னிலையில் "சத்தியாகிரகம்" நடத்தி சரணடைந்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நேரத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, 29 ஜனவரி 2013 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.[3]

நவ்யன் தொகு

புரட்சிகர பாடல்களால் புகழ்பெற்ற இந்த பாடல் கலைஞர் தம்பதியர் 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 45 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் "கருத்தியல் வேறுபாடுகள்" காரணமாக கபீர் கலா மஞ்ச் குழுவுடனான 15 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டுள்ளனர். இந்த தம்பதியினர் தற்போது நவ்யன் என்ற கலாச்சார குழுவை உருவாக்கி அதன்வழியே பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

கபீர் கலா மஞ்ச் குழுவில் இருக்கும்போதே, அவருடன் பணியாற்றிய சக கலைஞ்கரான சச்சின் மாலியை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு அபாங் என்ற ஒரு மகன் இருக்கிறான். (17 ஆம் நூற்றாண்டின் துக்காராம் பிரபலப்படுத்திய அபாங் கவிதை வடிவத்தின் நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது). [5]

  1. "A film with a difference [It took 14 years to make the 200-minute-long documentary “Jai Bhim Comrade” on Dalits. Director Anand Patwardhan explains why.]". தி இந்து. 28 சனவரி 2012 இம் மூலத்தில் இருந்து 30 திசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161230091022/https://www.thehindu.com/features/cinema/A-film-with-a-difference/article13387306.ece. 
  2. "India's social activist who's campaigning with her voice". DW. 2016-12-02. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  3. "Pune Crime Files: What is Kabir Kala Manch, the cultural group accused of being a Maoist front?". தி இந்தியன் எக்சுபிரசு. 2024-01-29. பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  4. "As Sathe, Mali Split from Kabir Kala Manch, the Struggle Between Caste and Class Continues". தி வயர். பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
  5. "This Folk Singer Is The Government's Worst Nightmare". பார்க்கப்பட்ட நாள் 17 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தல்_சாத்தே&oldid=3892047" இலிருந்து மீள்விக்கப்பட்டது