சீனப் பண்பாடு

சீனப் பண்பாடு (சீன மொழியில்: 中國文化) மிகவும் பழமையானதாகும். 5000 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் சிக்கலான நாகரிகம் ஆகும். சீனாவில் பழங்காலத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து இருந்தாலும், தற்சமயம் ஹான் சீனர்கள் எனப்படும் குடிகளே அதிகமாக உள்ளார்கள்.

சீனப் பண்பாட்டின் ஓர் உறுப்பான சீன ஒப்பரா பெய்ஜிங்கில் அரங்கேறுகிறது

மதங்கள்

தொகு

சீனாவில் அதிகமாக பின்பற்றப்படும் மதம் கன்புசியனிசம் மற்றும் டாவோயிசம் ஆகும். தற்காலத்தில் பௌத்த மதமும் பின்பற்றப்படுகிறது.

மொழிகள்

தொகு

சீனாவில் பெரும்பான்மையோர் மாண்டரின் எனப்படும் சீன மொழியையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரிலும் இம்மொழி பேசப்படுகிறது. இது, ஹொங்கொங், தைவானில் பேசப்படும் மொழியில் இருந்து சற்றே மாறுபட்ட மொழியாகும்.

கட்டடக்கலை

தொகு
 
தவிர்க்கப்பட்ட நகரம்

சீனர்கள் கட்டடம் கட்டுவதில் வல்லவர்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அடுக்குத் தூபி போன்றவற்றை கட்டினார்கள். இங்கே காட்டப்பட்டுள்ள கட்டடம் 600 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. இது தவிர சீனப்பெருஞ்சுவர் போன்ற பெருமை வாய்ந்த சுவர்களும் கட்டினார்கள். கட்டடம் கட்டும் பொழுது, ஃபெங்சுய் என்ற சாத்திரத்தை பின்பற்றிக்கொண்டே கட்டினார்கள். இந்த ஃபெங்சுய் ஆனது, வாஸ்து சாத்திரத்தை போன்றதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_பண்பாடு&oldid=2441872" இலிருந்து மீள்விக்கப்பட்டது