சீனாவில் காற்றுத் திறன்

சீனாவில் காற்றுத் திறன் (Wind power in China) பெரிய நிலப்பரப்பு மற்றும் நீண்ட கடற்கரையில் இருந்து கிடைப்பதால் விதிவிலக்கு ஏதுமின்றி ஏராளமான காற்று மூலங்களை இந்நா பெற்றிருப்பதாகக் கருதலாம்:[1]. சீனா தன்நாட்டு நிலப்பரப்பிலிருந்து 2380 கிகாவாட்டு காற்றுத் திறனையும் கடல்பரப்பிலிருந்து 200 கிகாவாட் காற்றுத் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது.[2]

சீனாவின் சிஞ்சியாங்கில் காற்றாலை
சீனாவின் சிஞ்சியாங்கில் காற்றாலை

சூன் 2015 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் 105 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அமைப்புகள் நிறுவப்பட்டன. சீனாவில் இருக்கும் ஒவ்வொரு அணுக்கரு நிலையத்திலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைக் காட்டிலும் இது அதிகமாகும்[3]. 2014 ஆம் ஆண்டில் காற்றாலை மின்னுற்பத்தி 138 கிலோவாட்மணியாக அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.6 சதவீதமாக இருந்தது[4]. இந்த அளவு 2012 உற்பத்தியான 99 கிலோவாட்மணி மின்சாரத்தை விட அதிகமாகும்[5]

100 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்ட காற்றாலைகளை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமைத்து ஆண்டுக்கு 190 கிலோவாட்மணி மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்று சீனா 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டது[6]. ஆனால் இந்த இலக்கு விரைவாகவே எட்டப்பட்டு 120 கிகாவட் காற்றாலைகள் அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டிவிடும் நம்பிக்கையுடன் சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[7] மின்கட்டமைப்பு மற்றும் மின் இணைப்பு பிரச்சினைகள் காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கிலோவாட் மணி என்ற இலக்கு சற்று கூடுதலான் இலக்காகும். 2014 ஆம் ஆண்டில் சீனா கூடுதலாக 23கிகாவாட் காற்றுத் திறனை சேர்த்தது. 2016 – 2020 ஆம் ஐந்தாண்டின் 13 ஆவது காலத் திட்டத்தில் சீனா 100 மில்லியன் கிலோவாட் காற்று திறனை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது[8].

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காற்றாலை மின்சாரம் ஒரு முக்கியமான கூறாகும் என்று சீனா அடையாளம் கண்டுள்ளது[9] . 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா தன்நாட்டுக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் காற்றாலை மின்னுற்பத்தியினால் அடைந்துவிடும் என்று ஆர்வார்டு மற்றும் திசிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்[10]. ஆனாலும் நடைமுறையில் சீனா காற்றுத்திறனைப் பயன்படுத்தி காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிறப்பான செயல்பாடு இன்றியே காணப்படுகிறது[11]. 2014 ஆம் ஆண் டில் அமெரிக்கா அதிக அளவு மின்சாரத்தை காற்றிலிருந்து உற்பத்தி செய்துள்ளது.[12]

2008 ஆம் ஆண்டு இறுதியில் குறைந்தது 15 சீன நிறுவனங்களாவது காற்றாலைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பகுதிப்பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன[13]. பொதுவாக சுழலிகள் 1.5 மெகாவாட் முதல் 3 மெகா வாட் வரையிலான அளவுகளில் காணப்பட்டன. வெளிநாட்டு காற்றாலை உற்பத்தியாளர்களுடன் கோல்டுவிண்டு, டோங்ஃபேங் எலக்டிரிக் மற்றும் சினோவெல் போன்ற சீனாவின் முன்னனி நிறுவனங்களும் சீனாவில் காற்றாலைகளை உற்பத்தி செய்தன[14] along with most major foreign wind turbine manufacturers.[15]. 2008 ஆம் ஆண்டில் சீனா சிறுதொழிலாகவும் 80000 காற்றுச்சுழலிகளை உற்பத்தி செய்தது. இந்த வளர்ச்சியின் காரணமாகவே சீனாவின் காற்றாலை மின் உற்பத்தித் தொழில் உலகத்தின் நிதிநெருக்கடிகளுக்கு ஆளாகாமல் தடையின்றி வளர்கிறது[14] .

மேற்கோள்கள்

தொகு
  1. Oceans of Opportunity: Harnessing Europe’s largest domestic energy resource pp. 18-19.
  2. Wind provides 1.5% of China's electricity Wind Power Monthly, 5 December 2011
  3. http://economictimes.indiatimes.com/news/international/business/chinas-wind-power-capacity-to-hit-120-gigawatts-by-2015/articleshow/49428252.cms
  4. http://cleantechnica.com/2015/01/28/chinas-wind-energy-output-dropped-2014/
  5. "China was world's largest wind market in 2012". Renewable Energy World. 4 February 2013. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2015.
  6. "China revises up 2015 renewable energy goals: report". Reuters. August 29, 2011. Archived from the original on நவம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2015.
  7. http://www.businessinsider.in/Chinas-wind-power-capacity-to-hit-120-gigawatts-by-2015-end/articleshow/49428753.cms
  8. http://www.bizjournals.com/prnewswire/press_releases/2015/10/14/MN27803
  9. Gow, David (2009-02-03). "Wind power becomes Europe's fastest growing energy source". London: Guardian. http://www.guardian.co.uk/environment/2009/feb/03/wind-power-eu. பார்த்த நாள்: 2010-01-31. 
  10. "China Could Replace Coal with Wind". Ecogeek.org. Archived from the original on 2009-10-15. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
  11. Andrews-Speed, Philip (November 2014). "China’s Energy Policymaking Processes and Their Consequences". The National Bureau of Asian Research Energy Security Report. http://nbr.org/publications/element.aspx?id=790. பார்த்த நாள்: December 24, 2014. 
  12. http://cleantechnica.com/2015/01/28/chinas-wind-energy-output-dropped-2014/
  13. "Caprotti Federico (2009) China's Cleantech Landscape: The Renewable Energy Technology Paradox ''Sustainable Development Law & Policy '' Spring 2009: 6–10" (PDF). Archived from the original (PDF) on 2011-06-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
  14. 14.0 14.1 REN21 (2009). Renewables Global Status Report: 2009 Update பரணிடப்பட்டது 2009-06-12 at the வந்தவழி இயந்திரம் p. 16.
  15. Adrian Lema and K. Ruby, “Towards a policy model for climate change mitigation: China's experience with wind power development and lessons for developing countries”, Energy for Sustainable Development, Vol. 10, Issue 4.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wind power in China
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_காற்றுத்_திறன்&oldid=3554847" இலிருந்து மீள்விக்கப்பட்டது