சீனிவாச சக்கரவர்த்தி
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
சீனிவாச சக்கரவர்த்தி (Srinivasa Chakravarthy) உயிரித் தொழில்நுட்பவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கணிதத் துறையையும் நரம்பியல் துறையையும் இணைக்கின்ற தகவல் தொடர்புத்துறை கோட்பாடுகளை நிறுவியுள்ளார். இவர் கணிப்பீட்டு நரம்பியல் துறை சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.[1]
கல்வி மற்றும் ஆய்வுப்பணி
தொகுஇவர் 1989 ஆம் ஆண்டில், சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பி. டெக் பட்டம் பெற்றார். 1991 ஆம் ஆண்டில் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவப் பொறியிலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 1991 முதல் 1996 முடிய உள்ள காலகட்டத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் துறையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு 1996 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் தனது முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை ஹியூஸ்டனில் உள்ள பேய்லெர் மருத்துவக் கல்லூரியில் நரம்பியங்கியல் துறையில் 1997 ஆம் ஆண்டில் முடித்தார்.[2]
இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற இந்திய மொழிகளில் கையால் எழுதப்பட்ட அமைப்புகளைப் புரிந்து கொள்ளும் ஒரு இணைய அமைப்பு முறையைக் கண்டறிந்துள்ளார். இவர் கணிப்பீட்டு நரம்பியல் மற்றும் கணிப்பீட்டு இதய இயக்க நோயியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.[3][4]
இவரும் இவரது அணியினரும் சேர்ந்து உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ள இசுபார்சு பாரதி (Sparsh Bharati) என்ற எழுத்துருவானது பார்வைக்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளதாக அறியப்படுகிறது.[5] மூளையின் ஒரு பகுதியாக அமைகின்ற பாசல் காங்லியா பகுதியில் செல்களின் இழப்பால் ஏற்படும் பார்க்கின்சன் நோயினைக் குணப்படுத்த வழிவகை செய்யக்கூடிய ஒரு கணிப்பீட்டு நிரலாக்க மாதிரியை உருவாக்கும் செயல்திட்டத்தின் நிர்வகிப்பவராக இவர் உள்ளார். கணிப்பீட்டு நரம்பியங்கியல் ஆய்வகத்தில் இத்திட்டப்பணிக்கு உதவக்கூடிய வகையில் பார்க்கின்சன் நோய் தீர்ப்பியல் ஆய்வகம் ஒன்றினைக் கட்ட சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 1972 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் நிதிப்பங்களிப்பு செய்துள்ளார்கள்.[6]
எழுதிய நூல்கள்
தொகு- டீமிஸ்டிஃபையிங் தி பிரைன் - ஏ கம்ப்யூடேசனல் அப்ரோச் (DEMISTIFYING THE BRAIN- A COMPUTATIONAL APPROACH)[7]
- சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு - (Autobiography Of Charles Darwin - Darwin Atmakatha)
- கம்ப்யூடேஷனல் நியூரோசயின்ஸ் மாடல்ஸ் ஆஃப் தி பாசல் காங்லியா (Computational Neuroscience Models of the Basal Ganglia - Cognitive Science and Technology)[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. V Srinivasa Chakravarthy". www.indiascienceandtechnology.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ "Department of Biotechnology, IIT Madras". biotech.iitm.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ BookDay (2024-08-01). "தொடர் : 1 - இன்றைய இந்திய விஞ்ஞானிகள் -100". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ Federal, The (2024-07-14). "'Bharati script' tackles language barrier: IIT Prof Srinivasa Chakravarthy". thefederal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ Sujatha, R. (2023-12-01). "'Sparsh Bharati' - a new guide for visually impaired persons". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ Service, Express News (2023-01-24). "IIT-Madras alumni to sponsor Parkinson's therapeutics lab". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ "Demystifying the Brain" (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-981-13-3320-0. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.
- ↑ "Computational Neuroscience Models of the Basal Ganglia" (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-981-10-8494-2. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.