சீபோர்கியம் அறுகார்பனைல்

சீபோர்கியம் அறுகார்பனைல் (Seaborgium hexacarbonyl) என்பது Sg(CO)6 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவுலோகச் சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் சீபோர்கியம் கார்பனைல் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குரோமியம், மாலிப்டினம் மற்றும் தங்குதன் ஒப்புமைகளைப் போலவே, இதுவும் சுழிய ஆக்சிசனேற்ற நிலையில் சீபோர்கியத்தின் ஆவியாகும் வழிப்பெறுதியாகும்.[1] சீபோர்கியம் அறுகார்பனைலலின் நடைமுறை பயன்பாடு குறைவாக உள்ளது. விஞ்ஞான ஆர்வத்திற்கு வெளியே, இதுவும் பிற ஆக்டிணைடு தாண்டல் சேர்மங்கள் அதிக அணுமின் சுமையின் விளைவாக மின்னணு கட்டமைப்பில் ஏற்படும் சார்பியல் விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட ஆய்வு செய்யப்படுகின்றன.

சீபோர்கியம் அறுகார்பனைல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அறுகார்பனைல்சீபோர்கியம்
வேறு பெயர்கள்
சீபோர்கியம் கார்பனைல்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/6CO.Sg/c6*1-2;
    Key: GMBKQKYFDUHVHF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C=[Sg](=C=O)(=C=O)(=C=O)(=C=O)=C=O
பண்புகள்
Sg(CO)6
வாய்ப்பாட்டு எடை 437.06 g·mol−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியக்கப் பண்பு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம் அறுகார்பனைல்
மாலிப்டினம் அறுகார்பனைல்
தங்குதன் அறுகார்பனைல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

ஈலியம் மற்றும் கார்பன் மோனாக்சைடு கலவை மூலம் சீபோர்கியம் அணுக்களை அனுப்புவதன் மூலம் Sg(CO)6 சேர்மத்தை தயாரிக்கலாம்:

Sg + 6 CO → Sg(CO)6

வினைகள்

தொகு

சீபோர்கியம் அறுகார்பனைல் இலகுவான ஒரின வேதிப்பொருள்களான மாலிப்டினம் அறுகார்பனைல் மற்றும் தங்குதன் அறுகார்பனைல் போன்றவற்றை ஒத்திருக்கும் வகையில் SiO2 மேற்பரப்புடன் வினைபுரிந்து தொடர்பு கொள்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Even, J.; Yakushev, A.; Dullmann, C. E.; Haba, H.; Asai, M.; Sato, T. K.; Brand, H.; Di Nitto, A. et al. (2014). "Synthesis and detection of a seaborgium carbonyl complex". Science 345 (6203): 1491–3. doi:10.1126/science.1255720. பப்மெட்:25237098. Bibcode: 2014Sci...345.1491E.  (subscription required)