சீமாட்டி ராய்

லேடி ராய் (Lady Rai) (கிமு 1570/1560 – 1530 ), பண்டைய எகிப்தை ஆண்ட் பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோசின் பட்டத்தரசி அக்மோஸ் நெபர்தாரியின் (கிமு 1562–1495) செவிலிப் பெண் ஆவார். எலியட் சுமித் எனும் தொல்லியல் அறிஞரால், எகிப்தின் தீபை நகரத்தில், பதினேழாம் வம்ச இராணி அக்மோஸ்-இன்ஹாபி கல்லறையின் வெளிப்புறத்தில் லேடி ராயின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. 30 முதல் 40 ஆண்டுகள் வாழ்ந்த லேடி ராய் கிமு 1530-ஆம் ஆண்டில் இறந்திருக்கலாம் என கணிக்கப்பட்டது.

லேடி ராய் மம்மியின் பக்கப்பார்வை, எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ

1.510 மீட்டர்கள் (4 அடி 11.4 அங்) உயரம் கொண்ட லேடி ராய் மம்மியின் கூந்தல் அலங்காரம் இன்றளவும் சிதைவுறாது உள்ளது. இம்மம்மியின் கையில் குழந்தையின் கைகள் போன்று உள்ளது.[1]2009-ஆம் ஆண்டில் லேடி ராயின் மம்மியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்த போது, இதயத்தின் பெருந்தமனி தடிப்பு பெருநாடி நோயால் இறந்திருக்கலம் எனகருதுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "XVIII'th Dynasty Gallery I". The Theban Royal Mummy Project. anubis4_2000.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
  2. Allam, Adel H. (November 18, 2009). "Computed tomographic assessment of atherosclerosis in ancient Egyptian mummies". JAMA: The Journal of the American Medical Association 302 (19): 2091–2094. doi:10.1001/jama.2009.1641. பப்மெட்:19920233. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமாட்டி_ராய்&oldid=3497797" இலிருந்து மீள்விக்கப்பட்டது