சீமா சம்ரிதி

இந்திய வழக்கறிஞர்

சீமா சம்ரிதி (Seema Samridhi) இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு வழக்கறிஞர் ஆவார். 1982 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார். சீமா சம்ரிதி குசுவாகா என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சட்ட ஆலோசகராக சீமா சம்ரிதி அறியப்படுகிறார். இவரது நீண்டகால சட்டப் போராட்டத்தின் காரணமாக, வயது வந்த குற்றவாளிகள் நான்கு பேரும் 2020 ஆண்டு மார்ச்சு மாதம் 20 அன்று திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர் [1][2]

சீமா சம்ரிதி
Seema Samridhi
பிறப்பு10 சனவரி 1982 (1982-01-10) (அகவை 42)
எட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கான்பூர் பல்கலைக்கழகம், உத்தரப்பிரதேச ராசார்சி டாண்டன் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள மகேவா நகரம் உக்ராபூர் கிராம பஞ்சாயத் பிதிபூர் வட்டம் சகர்நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். பாலாதின் குசுவாகா மற்றும் ராம்குவான்ரி குசுவாகா ஆகியோருக்கு மகளாக சீமா பிறந்தார். இவரது தந்தை பாலதின் குசுவாகா பிதிபூர் கிராம பஞ்சாயத்தின் கிராம தலைவராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு கான்பூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி., எனப்படும் சட்டப்படிப்பில் பட்டப்படிப்பை முடித்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள ராசார்சி டாண்டன் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு இளங்கலை இதழியல் பட்டமும் பெற்றார். அதன் பிறகு, அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்று 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார் [3][4]

சட்ட செயல்பாடு தொகு

நிர்பயா வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததும், அப்போது சட்டப் பயிற்சியாளராக இருந்த இவர் நீதி கேட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 2014 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக நிர்பயாவின் வழக்கறிஞரானார். வயது வந்த நான்கு குற்றவாளிகளுக்கும் விரைவில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினார். 2014 ஆம் ஆண்டு சனவரி 24 அன்று நிர்பயா சோதி அறக்கட்டளையில் சட்ட ஆலோசகராக சீமா சேர்ந்தார். நிர்பயா சோதி அறக்கட்டளை என்பது வன்முறையை அனுபவித்த பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் சட்ட உதவியைப் பெற உதவுவதற்காக பாதிக்கப்பட்டவரின் பெற்றோரால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இவ்வழக்கு சீமாவின் முதல் வழக்காகும். விரைவு நீதிமன்ற பட்டியலுக்கு இவ்வழக்கை மாற்ற சீமா அழுத்தம் கொடுத்தார். ஆயினும்கூட, குற்றவாளிகளின் பல மறு ஆய்வு மற்றும் சரிசெய்தல் மனுக்கள், சட்ட அமைப்பின் மந்தநிலை போன்ற அம்சங்கள் காரணமாக தீர்ப்பு தாமதமானது. இறுதியாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று, நீதிமன்றத்தால் கடைசியாக மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிகாலை இந்திய சீர் நேரம் 5:30 மணிக்கு  வயது வந்த கைதிகள் நால்வரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Advocate Seema Kushwaha Talks About Her Journey As Nirbhaya's Lawyer". femina.in.
  2. "Nirbhya case-fighting-till-justice-is-served". asianage. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  3. "Meet Seema Samriddhi Kushwaha, Nirbhaya's Lawyer Who Fought For 7-Years To Prevail Justice". HerZindagi English. 4 April 2020.
  4. ""Wanted To Make Them Pay": Nirbhaya's Lawyer Opens Up About Her Case". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  5. "Nirbhaya case: Four Indian men executed for 2012 Delhi bus rape and murder". 20 March 2020 – via www.bbc.com.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_சம்ரிதி&oldid=3841989" இலிருந்து மீள்விக்கப்பட்டது