சீரகக் குடிநீர்
சீரகக் குடிநீர் என்பது இந்திய மசாலாப் பொருட்களில் ஒன்றான சீரகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மரபார்ந்த இந்திய பானமாகும்.
செய்முறை
தொகுமுதல்நாள் இரவில் ஒரு லிட்டர் தண்ணீரை அரை மணி நேரம் அல்லது 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தளதளவென்று வரும்வரை கொதிக்கவிட வேண்டும். நீர் நன்கு சுண்டியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்க்க வேண்டும். இந்த நீரை இரவு முழுவது மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டவேண்டும். இந்த சீரகக் குடிநீரை தண்ணீருக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
பயன்பாடு
தொகுமழைக்காலம் அல்லது குளிர் காலங்களில், உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, வீட்டிலுள்ள தாய்மார்கள் சீரகக் குடிநீர் குடிக்க வலியுறுத்துகிறார்கள்.[1] 'உஷ்ணம் உஷ்ணீனு சாந்தி' என்பது ஆயுர்வேத சூத்திரம். வெப்பத்தை வெப்பத்தால் குறைக்க முடியும் என்பது இதன் பொருள்.[2] சூடான சீரகக் குடிநீர் பருகிவர உடல் சூடு தனியும், தாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், கேரளாவில் மக்கள் சீரகக் குடிநீரைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.[2] தமிழ்நாட்டிலும் சிலர் இதன் பயனை அறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
உடல் நலன்கள்
தொகுசீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) உடல் நலத்திற்கு உகந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். கார்ப்பு, இனிப்பு சுவையுடைய சீரகத்தில் குளிர்ச்சித்தன்மையும் உள்ளது. சீரகத்தின் நறுமணம், சுவை, காரணமாக சமையலில் சேர்க்கப்படுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை நிறைந்தது. [3] சீரகத்திலிருந்து சுரக்கும் நொதி (enzyme) உடலில் உள்ள சர்க்கரைகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவுகிறது; குடலியக்கத்தை மேம்படுத்துகிறது.[4]சீரகம் ஒரு கிருமி நாசினி ஆகும். [4] வயிற்றில் பூச்சிகளை சேர விடாது.
சீரகக் குடிநீரில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு தேக்கரண்டி சீரகம் விதைகளில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளன. [4] சீரக விதைகள் ஆக்ஸிஜனேற்றங்களால் (Anti-oxidants) நிரம்பியுள்ளன, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் ஒடுக்கிகளை (free oxygen radicals) அகற்ற உதவக்கூடும்.[4] சீரகத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைப்படி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன.[4]
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மழை நோய்களுக்கு செலவில்லா மருத்துவம் ஜெ.ஸ்ரீராம் இந்து தமிழ் திசை ஏப்ரல் 22 2022
- ↑ 2.0 2.1 Water, water, what water do you choose? Saraswathy Nagarajan The Hindu August 17, 2017
- ↑ நம்மகிட்டேயே இருக்குது மருத்துவம் டூ எங்கும் தேடாதீங்க...! வழிகாட்டும் ஆயுர்வேத மருத்துவர் தினமலர் ஆக 05, 2021
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 How to have jeera water (cumin water) to lose weight The Times of India Sep 6, 2020