சீரச் சவ்வு

சீரச் சவ்வு (serosa) உடற்கூற்றியலில், உடலின் பல்வேறு குழிகளின் (body cavities) அடக்கங்களை சூழ்ந்துள்ளதும் உட்புற சுவராகவுமுள்ள இடையணு அடுக்கின் வழவழப்பான இழையச் சவ்வு. இது ஊநீரைச் சுரந்து அசையும் இரு எதிரெதிர் பரப்புகளிடையே மசகிடுகிறது. உள்ளுறுப்புகளைச் சூழ்ந்துள்ள சீரச்சவ்வுஉள்ளுறுப்பிற்குரிய சவ்வு (visceral) எனப்படும்; குழியின் உட்புறச் சுவராக அமைந்துள்ள சீரச்சவ்வு குழிக்குரிய சவ்வு (parietal) எனப்படும். இரு எதிரெதிர் சீரச்சவ்வுகளுக்கிடையே பெரும்பாலும் சிறிதளவு சவ்வுநீர் தவிர வெற்றிடம் இருக்கும்.[2]

சீரச் சவ்வு
Serous Membrane
வயிறு. (வலக்கோடியில் சீரச்சவ்வு மஞ்சள் வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.)
விளக்கங்கள்
முன்னோடிஇடைச்சருமியம்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்டுனிகா செரோசா
MeSHD012704
FMA9581
உடற்கூற்றியல்
இதயவுறைக் குழியின் உட்புறம் சீரச்சவ்வால் ஆனது. இது இதயத்தைச் சூழ்ந்து பாதுகாக்கிறது.[1]

இதன் இலத்தீனிய உடற்கூற்றியல் பெயர் டூனிகா செரோசா (மூடுறை சீரச்சவ்வு). சீரச்சவ்வு உடலின் பல்வேறு குழிகளின் உட்புறச் சுவராக உள்ளது. இவை சீரக் குழிகள் எனப்படுகின்றன. இவற்றில் மசகிடும் வண்ணம் ஊநீர் சுரந்து அசைவுகளுக்கிடையேயான உராய்வைக் குறைக்கின்றன. சீரச்சவ்வு அயலுறை எனப்படும் இணைப்பிழையத்திலிருந்து வேறானது; அயலுறை இரு அமைப்புகளை ஒன்றுக்கொன்று இணைக்கிறது. உராய்வைத் தடுப்பது அதன் நோக்கமல்ல. இதயத்தையும் மார்பு இடைச் சுவரையும் சூழ்ந்த சீரச்சவ்வு இதய உறை எனவும், நெஞ்சுக் குழியையும் நுரையீரலையும் சூழ்ந்த சீரச்சவ்வு நுரையீரல் உறை எனவும் வயிற்றிடுப்புக் குழியையும் அதன் உள்ளுறுப்புகளையும் சூழ்ந்த சீரச்சவ்வு வயிற்றறை உறை எனவும் குறிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. J. Gordon Betts, Kelly A. Young, James A. Wise, Eddie Johnson, Brandon Poe, Dean H. Kruse, Oksana Korol, Jody E. Johnson, Mark Womble, Peter DeSaix (Apr 25, 2013). "1.6 Anatomical Terminology". Anatomy and Physiology. Houston, Texas: OpenStax.
  2. "The Anatomy of Lining and Covering Tissues-Membranes!". McGraw-Hill Companies. பார்க்கப்பட்ட நாள் September 2, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரச்_சவ்வு&oldid=3296895" இலிருந்து மீள்விக்கப்பட்டது