சீராக்கத்தக்க தடம்
சீராக்கத்தக்க தடம் (adjaustable knot) அல்லது வழுக்கு தடம் (slip knot) என்பது இரு வகையான தட முடிச்சு வகைகளைக் குறிக்கும். இவற்றுள் மிகப் பொதுவான முடிச்சு வகை, ஒரு கயிற்றை ஒரு பொருளில் கட்டுவதற்குப் பயன்படுகிறது. கயிற்றின் மற்ற முனையில் இழுவையை ஏற்படுத்தும்போது முடிச்சு இறுகும். மற்ற வகையில் இதே முடிச்சை இன்னொரு கயிற்றின் இடையில் போடுவர். இது முடிச்சிடப்பட்ட கயிறு மற்றக் கயிற்றின் நீளத்துக்கு வழுக்கிச் செல்ல உதவுகிறது.
தூக்கு மேடைகளில் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதற்கு இவ்வகை முடிச்சுக்களை மத்தியகால ஐரோப்பாவில் பயன்படுத்தினர்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2009-04-25.