சீரியசு மென் (திரைப்படம்)

2020 ஆம் ஆண்டு வெளியான நெற்ஃபிளிக்சு பிரத்யேக இந்தித் திரைப்படம்

சீரியசு மென் (தமிழாக்கம்: தீவிரமான மனிதர்கள்) என்பது சுதிர் மிசுரா இயக்கத்தில் அக்டோபர் 2, 2020 அன்று வெளியான நெட்பிளிக்சு பிரத்யேக நகைச்சுவை நாடக இந்தித் திரைப்படம் ஆகும்.[1]

சீரியசு மென்
நெற்ஃபிளிக்சு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்சுதிர் மிசுரா
தயாரிப்புசுதிர் மிசுரா
பவேசு மண்டேலியா
சேச்சல் சா
கதைபவேசு மண்டேலியா
அபிச்சீத்து குமான்
நிரேன் பட்
நிக்கில் நாயர்
இசைகரேல் ஏண்ட்டோனின்
நடிப்புநவாசுதீன் சித்திகி
இந்திரா திவாரி
நாசர்
அக்சத் தாசு
ஒளிப்பதிவுஅலெக்சாண்டர் சுகலா
படத்தொகுப்புஅதானு முகர்ச்சி
கலையகம்பாம்பே பேபில்சு
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுஅக்டோபர் 2, 2020 (2020-10-02)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

கதைக்கரு தொகு

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அய்யன் மணி தன் மனைவி மகனுடன் மும்பையில் உள்ள சேரி ஒன்றில் வாழ்ந்து வருகிறார். தன் குடும்ப நிலையை மேம்படுத்த முடிவெடுக்கும் அவர் தன் பத்து வயது மகனின் அறிவுத்திறன் பன்மடங்கு மிகுந்திருப்பதாய்க் கதைக்கிறார். உண்மைகள் வெளியாகத் துவங்குகையில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

நடிப்பு தொகு

அய்யன் மணி
என்கிற பாத்திரத்தில் நடித்தார் நவாசுதீன் சித்திகி.
தன் குடும்ப நிலையை மகனைப் பயன்படுத்தி உயர்த்த நினைக்கும் தந்தை கதாப்பாத்திரம்.
ஓச்சா மணி
என்கிற பாத்திரத்தில் நடித்தார்
இந்திரா திவாரி.
கணவனைக் காதலிக்கும் மற்றும் மகனை அன்போடு அரவணைக்கும் பெண் கதாப்பாத்திரம்.
ஆதி மணி
என்கிற பாத்திரத்தில் நடித்தார் குழந்தை நடிகர் அக்சத் தாசு.
தன் தந்தை சொல்படி கேட்டு நடக்கும் சிறுவன் கதாப்பாத்திரம்.
அரவிந்த் ஆச்சாரியா
என்கிற பாத்திரத்தில் நடித்தார் நாசர்.
மும்பை தேசிய ஆய்வுக் கழக இயக்குனராக பணிபுரியும் ஒரு கராரான கதாப்பாத்திரம்.

பதிப்பு தொகு

இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெற்ஃபிளிக்சில் ஒலியின் மொழியை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. அதனை பயன்படுத்தி விருப்பப்பட்ட மொழியில் ஒருவரால் இத்திரைப்படத்தைக் காண முடியும்.

மயூக்கி இன்சிங்க் என்கிற கலையகம் தமிழில் மொழி மாற்றம் புரிவதைக் கையாண்டது. எம்.வி.சத்யநாராயணா என்பவர் இயக்க, தமிழில் அய்யன் மணி கதாப்பாத்திரத்திற்கு பெருமாள் மாரிமுத்து என்பவரும் அரவிந்த் ஆச்சாரியா கதாப்பாத்திரத்திற்கு ராசேசு மூர்த்தி என்பவரும் குரல் கொடுத்திருந்தனர். அனீசு நவீன், பிரியா சந்தோசு, ஐசுவர்யா குமார் ஆகியோர் கூடுதல் கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர்.[2]

தயாரிப்பு தொகு

மனு யோசேப்பு எழுதிய சீரியசு மென் என்கிற புதினத்தைத் தழுவியே இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. [3]

சூன் 2019 அன்று நவாசுதீன் சித்திகி இத்திரைப்படத்தில் நடிப்பதென அறிவிக்கப்பட்டது.[4] செப்டம்பர் 2019 அன்று படப்பிடிப்பு துவங்கி அக்டோபர் 2, 2020 அன்று நெற்ஃபிளிக்சு மேலதிக ஊடக சேவைத் தளத்தில் அதன் பிரத்யேகத் திரைப்படமாய் வெளியானது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "நவாசுதீன் சித்திகி நடித்த நெட்பிளிக்சு திரைப்படம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி".
  2. "சீரியசு மென் - நெற்ஃபிளிக்சு".
  3. "சீரியசு மென் வெளியானது - தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்".
  4. "நெற்ஃபிளிக்சு பிரத்யேகத் திரைப்படத்தில் நவாசுதீன் சித்திகி - ஏ.என்.ஐ நியூஸ் வலைத்தளச் செய்தி".
  5. "நவாசுதீன் சித்திகி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது - ஐ. டபிள்யூ. எம். பஸ் செய்தி".