சீரியம்(IV) செலீனேட்டு

வேதிச் சேர்மம்

சீரியம்(IV) செலீனேட்டு (Cerium(IV) selenate) என்பது Ce(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

சீரியம்(IV) செலீனேட்டு
Cerium(IV) selenate
இனங்காட்டிகள்
131362-39-5 Y
65627-67-0 Y
InChI
  • InChI=1S/Ce.2H2O4Se/c;2*1-5(2,3)4/h;2*(H2,1,2,3,4)/q+4;;/p-4
    Key: KFWCNHLRVFJXRB-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • [Ce+4].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se]([O-])(=O)=O
  • [Ce+4].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se]([O-])(=O)=O.O.O.O.O
பண்புகள்
Ce(SeO4)2
தோற்றம் மஞ்சள் நிற படிகங்கள்[1]
அடர்த்தி 3.41 கி·செ,மீ−3
கரையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீரியம்(IV) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலாந்தனம்(III) செலீனேட்டு
பிரசியோடைமியம்((III)) செலீனேட்டு
தோரியம்(IV) செலீனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சூடான செலீனிக் அமிலமும் சீரியம்(IV) ஐதராக்சைடும் சேர்ந்து வினைபுரிவதன் மூலம் சீரியம்(IV) செலினேட்டு உருவாகிறது. உருவாகும் கரைசலை படிகமாக்கினால் சீரியம்(IV) செலீனேட்டின் நான்கு நீரேற்று உருவாகிறது.[2]

பண்புகள்

தொகு

Pbca என்ற இடக்குழுவில் a = 9.748 Å, b = 9.174 Å, and c = 13.740 Å என்ற அலகு செல் அளவுருக்களுடன் சீரியம்(IV) செலீனேட்டு படிகமாகிறது.[1][3]

சீரியம்(IV) செலீனேட்டு தண்ணீருக்கு வெளிப்படும் போது நீராற்பகுப்பு அடைகிறது. ஐதரசன் பெராக்சைடைப் பயன்படுத்தி மூவிணைதிற சீரியமாக இதைக் குறைக்கலாம்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gschneidner, Karl A.; Bünzli, Jean-Claude G.; Pecharsky, Vitalij K. (2005). Handbook on the physics and chemistry of rare earths. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-52028-9.
  2. M. A. Nabar, V. R. Ajgaonkar (1978-02-01). "Studies on selenates. III. Crystal chemical data for zirconium and cerium selenate tetrahydrates". Journal of Applied Crystallography 11 (1): 56–57. doi:10.1107/S0021889878012686. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8898. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0021889878012686. பார்த்த நாள்: 2020-04-23. 
  3. Iskhakova, L. D.; Kozlova, N. P.; Marugin, V. V. Crystal structure of cerium selenate (Ce(SeO4)2). Kristallografiya, 1990. 35 (5): 1089-1093. ISSN: 0023-4761.
  4. Meyer, Julius; Schulz, Franziska (1931-01-07). "Zur Kenntnis der Ceriselenate". Zeitschrift für anorganische und allgemeine Chemie 195 (1): 127–128. doi:10.1002/zaac.19311950114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786. http://dx.doi.org/10.1002/zaac.19311950114. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(IV)_செலீனேட்டு&oldid=3860692" இலிருந்து மீள்விக்கப்பட்டது