சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டு

சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Cerium acetylacetonate) என்பது Ce(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இது அசிட்டைலசிட்டோனின் சீரிய அணைவு ஆகும்.

சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்; (Z)-4-ஐதராக்சிபென்ட்-3-யீன்-2-னோன்
இனங்காட்டிகள்
15653-01-7
ChemSpider 4952846
InChI
  • InChI=1S/3C5H8O2.Ce/c3*1-4(6)3-5(2)7;/h3*3,6H,1-2H3;/q;;;+3/p-3/b3*4-3-;
    Key: PYPNFSVOZBISQN-LNTINUHCSA-K
  • InChI=1/3C5H8O2.Ce/c3*1-4(6)3-5(2)7;/h3*3,6H,1-2H3;/q;;;+3/p-3/b3*4-3-;
    Key: PYPNFSVOZBISQN-QQVDQASFBR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6450231
SMILES
  • [Ce+3].O=C(/C=C(\[O-])C)C.[O-]\C(=C/C(=O)C)C.[O-]\C(=C/C(=O)C)C
பண்புகள்
C15H21CeO6
வாய்ப்பாட்டு எடை 437.44 g·mol−1
தோற்றம் படிகத்தூள்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பயன்கள் தொகு

நுண்துளை நுண்படிக சீரியம்(IV) ஆக்சைடு உருவாக்கும் கரைசல்-கூழ்மச் செயல்முறையில் சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சீரியம் நைட்ரேட்டு, அசிட்டேட்டு, அசிட்டைலசிட்டோனேட்டு போன்றவை சீரியத்திற்கான ஆதார மூலங்களாக இருக்க முடியும். ஆனால் சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டின் தனித்துவப் பண்பு இவ்விளைவை கொடுக்கிறது. நிலைப்படுத்தும் ஐதரோகார்பன் சங்கிலியின் பிணைப்பு நீளத்திற்கு ஏற்ப இறுதி விளைபொருளின் படிக அமைப்பும் சிறிய அளவும் அமைகிறது. சீரியத்தின் மற்ற இரண்டு ஆதார மூலங்களும் இதற்கு எதிராக அமைகின்றன. நிலைப்படுத்தியிலுள்ள ஐதரகார்பனின் குறுகிய பிணைப்பு நீளம் கரைசலிலுள்ள சீரியம்(IV) ஆக்சைடு துகள்கள் கூழ்மமாக உறைவதைத் தடை செய்கின்றன [2].

கடோலினியம் அசிட்டைலசிட்டோனேட்டுடன் சேர்த்து கடோலினியக் கலப்பு சீரிய கூழ்மத்தூள் தயாரித்தலிலும் சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. இவையே கரைசல் கூழ்மச் செயல்முறையில் முன்னோடிச் சேர்மங்களாகும் [3].

மேற்கோள்கள் தொகு