சீரீ ஆ
சீரீ ஆ (Serie A,இத்தாலிய ஒலிப்பு: [ˈsɛːrje ˈa]) என்பது இத்தாலியின் கால்பந்துக் கழகங்களுக்கான கூட்டிணைவுப் போட்டித்தொடராகும். அந்நாட்டின் கால்பந்துப் போட்டித்தொடர் கூட்டிணைவுகளில் முதல்நிலையில் இருப்பதாகும். விளம்பர ஆதரவின் காரணமாக சீரீ ஆ டிஐஎம் (Serie A TIM) என்றறியப்படுகிறது. இது 1929-30 பருவத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று வாகையர் பட்டத்துக்குப் போட்டியிடும். உலக அளவில் புகழ்பெற்ற அணிகளான யுவென்டசு, ஏசி மிலான் மற்றும் இன்டர்நேசனல் ஆகிய கழகங்கள் சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்.
நாடுகள் | இத்தாலி |
---|---|
கால்பந்து ஒன்றியம் | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் |
தோற்றம் | 1898 officially 1929 as round-robin tournament |
அணிகளின் எண்ணிக்கை | 20 |
Levels on pyramid | 1 |
தகுதியிறக்கம் | சீரீ பி |
உள்நாட்டுக் கோப்பை(கள்) | இத்தாலியக் கோப்பை இத்தாலிய உன்னதக்கோப்பை |
சர்வதேச கோப்பை(கள்) | யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு |
தற்போதைய வாகையர் | யுவென்டசு (28வது வாகையர் பட்டம்) (2011–12) |
அதிகமுறை வாகைசூடியோர் | யுவென்டசு (28 பட்டங்கள்) |
தொலைக்காட்சி பங்குதாரர்கள் | SKY Italia Mediaset Premium |
இணையதளம் | legaseriea.it |
2012–13 Serie A |
உலக அளவில் கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித்தொடர்களில் சீரீ ஆ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 90-களிலும் 2000-களின் மத்திவரையிலும் சீரீ ஆ-வே சிறந்த கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகக் கருதப்பட்டது.[1] ஐரோப்பியக் கோப்பைப் போட்டிகளின் இறுதியாட்டத்தை எட்டிய அணிகளில் அதிகமானவை சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்; இத்தாலிய கால்பந்துக் கழகங்கள் மொத்தம் 26 முறை ஐரோப்பியக் கோப்பை இறுதியாட்டங்களில் விளையாடி 12 முறை வென்றிருக்கின்றன. (இறுதிப் போட்டியை இத்தனை முறை எட்டியிருப்பது இதுவரை விஞ்சப்படாத சாதனையாகும்.) [2]
யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணகங்களின்படி சீரீ ஆ, ஐரோப்பாவில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக், எசுப்பானியத்தின் லா லீகா, செருமனியின் புன்டசுலீகா ஆகியவற்றுக்குப் பிறகு 4-ஆம் இடத்தைப் பிடிக்கிறது.[3] இக்குணகம், அக்குறிப்பிட்ட கூட்டிணைவைச் சேர்ந்த கழகங்கள் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து கணக்கிடப்படும்.
உசாத்துணைகள்
தொகு- ↑ http://www.uefa.com/memberassociations/association=ita/honours/index.html
- ↑ Kevin Ashby (2007-05-24). "Serie A reiterates star quality". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 2007-08-13.
- ↑ "UEFA Country Ranking 2011". பார்க்கப்பட்ட நாள் 9 August 2010.