முதன்மை பட்டியைத் திறக்கவும்

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO), அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையம் (IEC) என்பவற்றின் வழிகாட்டல் கையேடு (ISO/IEC Guide 2:1996) நியமம் என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறது.

குறிப்பிட்ட சூழலில் உகந்த அளவு ஒழுங்குமுறையை அடையக்கூடிய வகையில் பொதுவான மற்றும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதற்கான விதிகள், வழிகாட்டல்கள், அல்லது செயற்பாடுகளுக்கு அல்லது அவற்றின் விளைவுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள் என்பவற்றைத் தருகின்றதும், பொது இசைவு மூலம் உருவாக்கப்பட்டு, அதிகாரம் பெற்ற அவை ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்டதுமான ஒரு ஆவணம் ஆகும்.

இதன்படி நியமம் என்பது பின்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளது.

 • பொது இசைவுமூலம் உருவாக்கப்படல்.
 • அதிகாரம் பெற்ற அவை ஒன்றினால் அங்கீகரிக்கப்படல்.
 • உகந்த (optimum) அளவு ஒழுங்குமுறையை அடைவதை நோக்கமாகக் கொண்டிருத்தல்.
 • பின்வருவனவற்றுள் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ உள்ளடக்கமாகக் கொண்டிருத்தல்:
  • விதிகள்
  • வழிகாட்டல்கள்
  • செயற்பாடுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள்
  • அவற்றின் விளைவுகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகள்

சில அடிப்படைகள்தொகு

எல்லா நியமங்களும் ஒரே விதமாக அமைவதில்லை. வெவ்வேறு நோக்கங்களுக்கு ஏற்ப அவை வேறுபட்ட இயல்புகளைக் கொண்டனவாக உருவாக்கப்படுகின்றன. சமூகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் முதலிய பெரும்பாலான துறைகளில் மனிதருடைய செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தக்கூடிய வகையில் நியமங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்தரம்&oldid=2740365" இருந்து மீள்விக்கப்பட்டது