சீர்திருத்த யூதம்
சீர்திருத்த யூதம் (Reform Judaism), சுதந்திர யூதம் (Liberal Judaism) அல்லது முற்போக்கு யூதம் (Progressive Judaism) எனப்படும் இது ஒரு பெரிய யூதச் சமய இயக்கமாகும். இது சமயத்தின் இயற்கை வளர்ச்சியையும், சமயச்சடங்கிலுள்ள நெறிப் பண்புகளின் மேன்மையையும், தொடர்ச்சியான வெளிப்படுத்தலில் நம்பிக்கையும் கொண்டு காணப்பட்டாலும், சீனாய் மலையில் கடவுள் தோன்றியதை மையமாகக் கொள்வதில்லை. இது யூதச் சமய சட்டம் தொடர்பில் தனிமனிதக் கடைப்பிடிப்பு, சடங்கு ஆகியவற்றில் அதிகம் ஈடுபடாத பண்பைக் கொள்ளாது, முற்போக்குப் பண்பு, வெளித்தாக்கம் என்பவற்றில் ஈடுபாடு காட்டுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் செருமனியில், ராபி ஆபிரகாம் கெய்கர் என்பவரின் ஆரம்ப அடிப்படைகளைக் கொண்டு இதன் தோற்றம் ஏற்பட்டது.[1] இன்று வட அமெரிக்காவில் பாரிய அமைப்பாகவுள்ளது.
உசாத்துணை
தொகு- ↑ "Reform Judaism: History & Overview". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Reform Judaism, Encyclopedia Judaica 2nd Edition, 2007.
- ReformJudaism.org
- Union for Reform Judaism
- RJ.org பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்: Official blog site of the Union for Reform Judaism
- World Union for Progressive Judaism
- Central Conference of American Rabbis
- Hebrew Union College Jewish Institute of Religion
- Israel Religious Action Center
- Research and articles about Reform Judaism on the Berman Jewish Policy Archive