சீவசமுளைத்தல்

சீவச முளைத்தல்

சீவசமுளைத்தல் (vivipary) இருவேறு பொருள் கொண்டதாகப் பயன்படுத்தப்படுகின்றது. விலங்குகளில் தாய் விலங்கின் உடற்குழியின் உட்புறத்திலே நடைபெறுகின்ற முளையவிருத்தியை குறிக்கின்றது. அதாவது முட்டைகள் மூலமான முளைய விருத்திக்கு எதிரானது. தாவரங்களில் தாய்த்தாவரத்தில் இணைந்திருக்கும் நிலையிலேயே முளைய விருத்தி நடைபெறுவது. இது வித்துக்கள் நிலத்தில் முளைப்பதற்கு எதிரானது.

தாவரங்களில்

தொகு
 
Poa alpina, எனும் புல்லினம் சீவச முளைத்தலினைக் காட்டுவது
 
அலையாத்தித் தாவரம் தாய்த் தவரத்துடன் இணைந்த நிலையிலேயே முளைத்திருத்தல்

சீவசமுளைத்தல் தாவரங்கள் தாய்த் தாவரத்திலிருந்து வேறாவதற்கு முன்னமே முளைக்கக் கூடிய வித்துக்களை ஆக்குகின்றன. பல அலையாத்தித் தாவரங்கள்,தாய்த் தாவரத்துடன் இணைந்த நிலையிலேயே தாமாகவே முளைத்து விடுகின்றன. இவை நீரில் விழுந்து நீரோட்டத்தின் மூலம் பரம்பலைகின்றன. ஏனையவை அதிக, நேரிய ஆணி வேர்களை உருவாக்கி அதன் மூலம் சேற்றில் ஊடுருவி நிலைநிறுத்தப்படுகின்றன.

பலா, தோடை முதலான சில தாவர வித்துக்கள் பழம் மிகையாகப் பழுக்கும் சந்தர்ப்பங்களில் பழங்களின் உள்ளேயே முளைத்து விடுகின்றன. இச் செயற்பாடு சீவசமுளைத்தல் அல்ல. உண்மையில் முளைத்தலுக்குச் சாத்தியமான புறச் சூழலை ஒத்த சூழல் கிடைப்பதாலேயே அவை உள்ளே முளைக்கின்றன. இவற்றுக்கு தாய்த் தாவரத்துடன் இணைந்திருப்பது அவசியமில்லை. இவை, நிலத்திலும் முளைக்கும் தன்மை கொண்டவை.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "UCLA: The Mildred E. Mathias Botanical Garden". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவசமுளைத்தல்&oldid=3554810" இலிருந்து மீள்விக்கப்பட்டது