சீ. கல்யாணராமன்
சீ. கல்யாணராமன் (T. S. Kalyanaraman) இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் கல்யாண் குழுமத்தின் கல்யாண் நகை கடைகளின் தலைவர் ஆவார். போர்ப்ஸ் இந்திய வெளியீட்டின் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 87 ஆவது இடத்தில் இடம்பெற்றார்.[1]
டி.எசு. கல்யாணராமன் T. S. Kalyanaraman | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 23, 1947 திருச்சூர், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீ கேரள வர்மா கல்லூரி |
பணி | வணிகம் |
செயற்பாட்டுக் காலம் | 1993 – முதல் |
பணியகம் | கல்யாண் குழுத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | இரமாதேவி |
பிள்ளைகள் | 3 |
பிறப்பு
தொகுகல்யாணராமன் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரது தந்தையான சீதாராமையரிடம் தொழில் பயின்ற பின்னர், கேரள வர்மா கல்லூரியில் வணிகவியல் பயின்றார். இவருக்கு இரண்டு மக்ன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[2]
தொழில்
தொகுஇவரது தலைமையில் கீழ் இயங்கும் கல்யாண் நகை கடை இந்தியா முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது. இவருக்கு ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் என்று இரு மகன்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.forbes.com/profile/ts-kalyanaraman/#
- ↑ "The success story of Kalyan Jewellers". Rediff. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.