நா. சுகுமாரன்
(சுகுமாரன் (கவிஞர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957; கோவை, இந்தியா) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.[1] கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இவர் இயங்கிக்கொண்டிருக்கிறார்.[2]
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகமொன்றை (சினிமா அனுபவம்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.
புத்தகங்கள்
தொகுகவிதைத் தொகுப்புகள்
தொகு- கோடைக்காலக் குறிப்புகள்(1985)[3]
- பயணியின் சங்கீதங்கள் (1991)
- சிலைகளின் காலம்(2000)
- வாழ்நிலம் (2002)
- பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
மொழிபெயர்ப்புகள்
தொகு- மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
- வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
- இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
- கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)
- பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)
- பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)
- மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)
- சினிமா அனுபவம் (2006)
- காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)
- மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)
- அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)
கட்டுரைகள்
தொகு- திசைகளும் தடங்களும் (2003)
- தனிமையின் வழி ( 2007)
- இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)
- வெளிச்சம் தனிமையானது (2008)
மேற்கோள்கள்
தொகு- ↑ "சுகுமாரன் கவிதைகள்". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
- ↑ "மொழியின் உயிர்த்துடிப்பு கவிதை- சுகுமாரன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
- ↑ "சுகுமாரன் 60 - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.