சுகுமி
சுகுமி (Sukhumi அல்லது Sokhumi,[1] உருசியம்: Сухум, சுகும்) மேற்கு சியார்சியாவின் நகரமும், கருங்கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய அப்காசியாவின் தலைநகரமும் ஆகும். 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சியார்சிய-அப்காசியப் பிரச்சினையில் இந்நகரம் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.
சுகுமி
Sukhumi სოხუმი, Аҟәа சொகுமி, ஆக்வா | |
---|---|
அப்காசியாவில் சுகுமியின் அமைவிடம் | |
Country | சியார்சியா |
பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடு | அப்காசியா |
குடியேற்றம் | கிமு 6-ஆம் நூற்றாண்டு |
நகரவாக்கம் | 1848 |
அரசு | |
• நகர முதல்வர் | அத்குர் கராசியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 27 km2 (10 sq mi) |
உயர் புள்ளி | 140 m (460 ft) |
தாழ் புள்ளி | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 62,914 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 (மாஸ்கோ நேரம்) |
அஞ்சல் குறியீடு | 384900 |
இடக் குறியீடு | +7 840 22x-xx-xx |
வாகனப் பதிவு | ABH |
இணையதளம் | www |
சுகுமி நகரம் கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. துறைமுகமாகவும், முக்கிய தொடருந்து சந்தியாகவும் செயல்படும் சுகுமி ஒரு முக்கிய சுற்றுலாத் தலமும் ஆகும். கடற்கரைகள், உடல்நல நிலையங்கள், கனிம மருத்துவ நீரூற்றுகள், கொண்ட இந்நகர் வெப்பமண்டலங்களின் ஒரப்பகுதிகளைச் சார்ந்த காலநிலையைக் கொண்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா 1840 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அப்காசிய அரசுப் பல்கலைக்கழகம், சுகும் திறந்த கல்விக்கழகம் ஆகிய அறிவியல் ஆய்வுக் கல்வி நிலையங்கள் இங்குள்ளன. 1945 ம்தல் 1954 வரை இங்குள்ள இலத்திரனியற்பியல் ஆய்வுகூடம் சோவியத் அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன.