இஞ்சி
(சுக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Zingiber officinale இஞ்சி | |
---|---|
![]() | |
Secure
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்குந்தாவரம் |
வகுப்பு: | Liliopsida |
வரிசை: | இஞ்சிவரிசை |
குடும்பம்: | இஞ்சிக் குடும்பம் |
பேரினம்: | Zingiber |
இனம்: | Z. officinale |
இருசொற் பெயரீடு | |
Zingiber officinale ரொசுக்கோ[1] |
இஞ்சி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இது ஓராண்டுப் பயிராகும்.
பெயர் தோற்றம் தொகு
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.[2]
பழம்பாடல் தொகு
“ |
|
” |
உபயோக முறைகள் தொகு
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று.
- இஞ்சித்துவையல்
- இஞ்சிக்குழம்பு
- இஞ்சிப்பச்சடி
- இஞ்சிக்கஷாயம்
சுக்கு தொகு
உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.
மேலும் படிக்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Zingiber officinale information from NPGS/GRIN". www.ars-grin.gov இம் மூலத்தில் இருந்து 2015-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001171854/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?42254. பார்த்த நாள்: 2008-03-03.
- ↑ ஞா. தேவநேயப்பாவாணர். பண்டைத் தமிழ் நாகரிகமும், பண்பாடும், பக் 99