சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

(சுசிந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (Suchindram Theroor Birds Sanctuary) ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சுசீந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். அனைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் நகருக்கு அருகில் உள்ளது. இது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் அமைந்துள்ளது. இது மத்திய ஆசியப் பறக்கும் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும். 2002 ஆம் ஆண்டு, இப்பகுதியைப் 'பறவைகள் சரணாலயம்' என அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது.[3][4] சுசீந்திரம் குளத்தின் அமைவிடம் 8°7′30″N 77°27′30″E / 8.12500°N 77.45833°E / 8.12500; 77.45833 ஆகும். தேரூர் குளத்தின் அமைவிடம் 8°10′45″N 77°27′45″E / 8.17917°N 77.46250°E / 8.17917; 77.46250 ஆகும். இச்சரணாலயத்தின் குறியீட்டு எண் IN279 ஆகும்.[5] சரணாலயத்தின் சில பகுதிகள் 2022 முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.[1][2]

சுசீந்திரம் தேரூர் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம்
சுசீந்திரம் நீர்த்தட வளாகம்
சுசீந்திரம் நீர்த்தட வளாகம்
சுசீந்திரம் தேரூர் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம்
அமைவிடம்தமிழ் நாடு
ஆள்கூறுகள்8°10′45″N 77°27′45″E / 8.17917°N 77.46250°E / 8.17917; 77.46250
ஏரி வகைஉவர் நீர்
வடிநிலப் பரப்பு3 km2 (0 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்1.95 km (1.2 mi)
அதிகபட்ச ஆழம்9 m (29.5 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்0 – 19 m (62.3 அடி)
குடியேற்றங்கள்நாகர்கோவில், தமிழ் நாடு
அலுவல் பெயர்வேம்பன்னூர் நீர்த்தட வளாகம்
தெரியப்பட்டது8 ஏப்ரல் 2022
உசாவு எண்2474[1]
அலுவல் பெயர்சுசீந்திரம் தேரூர் நீர்த்தட வளாகம்
தெரியப்பட்டது8 ஏப்ரல் 2022
உசாவு எண்2492[2]
சுசீந்திரம் தேரூர் வேம்பன்னூர் நீர்த்தட வளாகத்தில் பறவைகள் கண்காணிப்பு கோபுரம்
தாமரைப்பூ

குளங்கள்

தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கில், குளங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 2,058 நன்னீர் குளங்கள் உள்ளன. சுசீந்திரம், தேரூர் தவிர, பறக்கை, தத்தியார் குளம், வேம்பனூர் குளம், சுங்கான்கடை குளம், புத்தேரிக் குளம், தாழக்குடி குளம் மற்றும் மணவாளக்குறிச்சி குளம் போன்றவை பறவைகளின் முக்கியமான இடங்களாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் எல்லையான குமரி மாவட்டத்தில், புலிகள் வாழும் 'காட்டுயிர்ச் சரணாலயம்' ஒன்றும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "வேம்பன்னூர் நீர்த்தட வளாகம்". ராம்சர் தள தகவல் சேவை. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  2. 2.0 2.1 "சுசீந்திரம் தேரூர் நீர்த்தட வளாகம்". ராம்சர் தள தகவல் சேவை. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  3. "Policy Note on Forest and Environment 2002–2003, Demand No. 14". Government of Tamil Nadu. July 7, 2003. Archived from the original on 2003-11-25. பார்க்கப்பட்ட நாள் 2010-11-02.
  4. "11 more wildlife, bird sanctuaries". The Hindu. Apr 30, 2002 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103181256/http://www.hindu.com/thehindu/2002/04/30/stories/2002043002910100.htm. பார்த்த நாள்: 2009-01-08. 
  5. பன்னாட்டு பறவை வாழ்க்கை Suchindram Therur, Vembanoor[தொடர்பிழந்த இணைப்பு]