சுசிலா கெர்கெட்டா

சுசிலா கெர்கெட்டா (Sushila Kerketta-27 ஏப்ரல் 1939-19 அக்டோபர் 2009) 1985 முதல் 2000 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் கூண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

சுசிலா கெர்கெட்டா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்கரிய முண்டா
பின்னவர்கரிய முண்டா
தொகுதிகூண்டி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஏப்ரல் 1939
ராஞ்சி, சார்க்கண்டு
இறப்பு19 அக்டோபர் 2009
குந்தி நகரம், சார்க்கண்டு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நோட்ரோட் கெர்கெட்டா
பிள்ளைகள்3 மகன்கள் & 2 மகள்கள்
வாழிடம்(s)ராஞ்சி, சார்க்கண்டு
As of 25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

சுசிலா பீகார் அரசில் பல முக்கிய துறைகளில் பதவி வகித்துள்ளார்.[1] 1985 முதல் 1988 வரை நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 1989ஆம் ஆண்டில் இவர், சுரங்கங்கள் மற்றும் புவியியல் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்தார்.

சுசிலா சார்க்கண்டின் கூண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் பணியாற்றியுள்ளார்.

இளமையும் கல்வியும்

தொகு

சுசிலா பீகாரில் 1939 ஏப்ரல் 27 அன்று பீகாரின் ராஞ்சி பிரபுதயால் மார்க்கி மற்றும் மைனி மார்க்கி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் ராஞ்சியில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் கல்வியில் இளங்கலை மற்றும் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் சுசிலா, நோட்ரோட் கெர்கெட்டாவை 28 திசம்பர் 1970-இல் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு ரோசன், பிரவீன், நவீன், சந்தியா மற்றும் ஆஷா என்ற மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1]

சுசிலா பிர்சா கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். இதன் பின்னர் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

தனிப்பட்ட நலன்கள்

தொகு

கெர்கெட்டா ஒரு சமூக சேவகர். இவர் தொடர்ந்து உள்ளூர் கிராமங்களுக்குச் சென்று உள்ளூர் கை தறிகள் போன்ற நிறுவனங்களை ஊக்குவித்தார். இவர் வில்வித்தை, கால்பந்து மற்றும் வளைதடிப் பந்து ஆகிய விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர். இவர் சார்க்கண்டு மகளிர் வளைதடிப் பந்தாட்டச் சங்கம், மகளிர் வளைதடிப் பந்தாட்டச் சங்கம் (சோட்டாநாக்பூர்) மற்றும் பீகார் மகளிர் வளைதடிப்பந்தாட்டச் சங்க தலைவராக இருந்துள்ளார்.[1]

வகித்த பதவிகள்

தொகு
  • 1985-2000 உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை (மூன்று முறைகள்)
  • 1985-88 மாநில அமைச்சர், நீர்ப்பாசனம், பீகார் அரசு
  • 1988-89 ஊரக வளர்ச்சி, உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர், பீகார் அரசு
  • 1989-90 அமைச்சர், சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறை, பீகார் அரசு
  • 1990-95 ஒருங்கிணைப்பாளர், பொதுக் கணக்குக் குழு, பீகார் சட்டமன்றம்
  • 1990-2000 துணைத் தலைவர், காங்கிரசு கட்சி, பீகார் சட்டமன்றம்; தலைவர், சிறுவர் மற்றும் பெண் அபிவிருத்தி குழு (இரு முறை)
  • 2004 14வது மக்களவை உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு; உறுப்பினர், தொழிலாளர் குழு
  • 16 ஆகத்து 2006 உறுப்பினர், பெண்கள் அதிகாரமளித்தல் குழு
  • 5 ஆகத்து 2007 உறுப்பினர், தொழிலாளர் நிலைக்குழு

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கெர்கெட்டா திசம்பர் 28, 1970-இல் நோட்ராட் கெர்கெட்டாவை மணந்தார். பின்னர் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர். நோட்ரோட் கெர்கெட்டா இறப்பதற்கு முன்னதாகவே இறந்தார்.

கெர்கெட்டா 19 திசம்பர் 2009 அன்று ராஞ்சியில் மாரடைப்பைத் தொடர்ந்து இறந்தார்.[1] கெர்கெட்டா இறக்கும்போது தனது மூத்த மகன் ரோசன் குமார் சூரினுடன் தங்கியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  2. 2.0 2.1 "The Telegraph – Calcutta (Kolkata) | Jharkhand | Sushila Kerketta passes away". www.telegraphindia.com. Archived from the original on 29 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிலா_கெர்கெட்டா&oldid=3913232" இலிருந்து மீள்விக்கப்பட்டது