சுசுமா இராணா

சுசுமா இராணா (Sushma Rana) என்பவர் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் ஆவார். இவர் 2006 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் சுசுமா 1140 புள்ளிகளைப் பெற்றார்.[1] இவரது கூட்டாளியாக சரோஜா குமாரி ஜுது செயல்பட்டார். இவர் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2002-2003 ஆண்டு காலகட்டத்தில் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய சாதனை படைத்துள்ளார்.  இவர் தனது மூத்த சகோதரரும், துப்பாக்கி சுடும் வீரருமான ஜஸ்பால் ராணாவினால் விளையாட்டில் ஈடுபடத் தூண்டப்பட்டார்.[1]

சுசுமா மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மருமகள் ஆவார்.

வாழ்க்கை

தொகு

சுசுமா பழைய பாஜக உறுப்பினரான நாராயண் சிங் இராணாவின்[2] மகளாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களில் ஜஸ்பால் ராணா, அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] சுசுமா உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனுமான பங்கஜ் சிங்கினை[4] மணந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குறிப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Our youth icons rock". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  2. Son Jaspal Rana to campaign for Congress as dad gets BJP ticket
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. Shukla, Ankita (17 November 2018). "राजनाथ सिंह जीवनी, इतिहास, जाति, शिक्षा, परिवार, पत्नी, माता, पिता !!". Oye Hero. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமா_இராணா&oldid=3400755" இலிருந்து மீள்விக்கப்பட்டது