சுசேன் வாக்கர்
சுசேன் வாக்கர் (Suzanne Walker) ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் மூலக்கூறு மரபியல் பேராசிரியராக உள்ளார். நுண்ணுயிர்க்கொல்லி இயங்கமைப்பு மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு ஆகிய பிரிவுகளில் இவரது ஆய்வுகள் அமைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாதமியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுசேன் வாக்கர் Suzanne Walker | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
பணி | உயிர்வேதியியலாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் |
கல்விப் பின்னணி | |
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் பி.ஏ பிரின்சுடன் பல்கலைக்கழகம் முனைவர் |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
Main interests | நுண்ணுயிர் எதிர்ப்பி நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு |
தொழில்
தொகுவாக்கர் 1983 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஏ பட்டம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். வாக்கர் 1995 ஆம் ஆண்டில், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார், 2003 ஆம் ஆண்டு ஒரு முழு நேர பேராசிரியர் பதவியை அடைந்தார். பிரின்சுடனில் வேதியியல் முழு பேராசிரியரான முதல் பெண் என்ற சிறப்பு இவருக்குக் கிடைத்தது. 2004 ஆண் ஆண்டு வாக்கர் ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். [1] [2]
2020 ஆம் ஆண்டு வாக்கர் தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] அமெரிக்க நுண்ணுயிரியியல் அகாதமியின் உறுப்பினராகவும் 2019 ஆம் ஆண்டு வாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வேதியியல் சங்கம் வழங்கும் ஆர்தர் சி. கோப் இசுகாலர் விருது மற்றும் ஆல்ஃபிரட் பி. இசுலோன் அறக்கட்டளை உறுப்பினர் தகுதியையும் பெற்றுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Professor Suzanne Walker presents Kolthoff Lectureship". Department of Chemistry (in ஆங்கிலம்). 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ "Arthur C. Cope Scholar Awards: Suzanne Walker | February 28, 2011 Issue - Vol. 89 Issue 9 | Chemical & Engineering News". cen.acs.org. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ "2020 NAS Election". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.