சுட்டீவென் இராலிங்சு

பிரித்தானிய வானியலாளர்

சுட்டீவென் கிரெகொரி இராலிங்சு (Steven Gregory Rawlings) (11 அக்தோபர், 1961 – 11, ஜனவரி, 2012) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் பேராசிரியாக இருந்தார். இவர் புனித் பீட்டர் கல்லூரியில் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ், டப்ளின் ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியில் இயற்பியலும் கோட்பாட்டு இயற்பியலும் படித்து கதிர்வீச்சு வானியலில் முனைவர் பட்டத்தை 1988 இல் பெற்றார். இவர் சதுர கிலோமீட்டர் அணித் திட்டத்தில் தலைமையேற்ற அறிவியலாளரில் ஒருவராவார்.[1]

சுட்டீவே இராலிங்சு, SKADS கருத்தரங்கம், இலெமலெட்டி, பெல்ஜியம், 4 நவம்பர் 2009

இவர் 2012, ஜனவரி, 13இல் தன் நெருங்கிய தோழியும் உடன் பணிபுரிந்தவருமான முனைவர் தேவிந்தர் சிவியாவின் வீட்டில் இறந்தார்.. சிவியா அறிவியலுக்கான கணிதவியல் விரிவுரையாளராக ஆக்சுபோர்டு புனித் ஜார்ஜ் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.[2][3] இவரது இறப்பு தற்செயலானதாகப் பதிவு செய்யப்பட்டது.[4]இவர் சிவியாவுடன் இணைந்து Foundations of Science Mathematics எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் 1999 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. [5]

சில்போல்ட்டன் நோக்கீட்டகத்தின் தாழ் அலைவெண் அணி தொலைநோக்கி இராலிங்சு அணி என இவரது நினைவாக 2013, ஆகத்து, 27 இல் பெயரிடப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Mark Damazer (12 சனவரி 2012). "Professor Steve Rawlings". St Peter's College, Oxford. Archived from the original on 16 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2012.
  2. John F. Burns (13 January 2012). "Death of Oxford Astrophysicist Evokes Echoes of a TV Drama for the British". The New York Times. https://www.nytimes.com/2012/01/14/world/europe/steven-rawlings-case-evokes-oxfords-inspector-morse.html?src=recg. 
  3. Caroline Davies; Robert Booth; Jeevan Vasagar (13 January 2012). "Oxford professor Steven Rawlings's wife says his death was 'tragic accident'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15. {{cite web}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  4. "Oxford University's Steven Rawlings 'died after headlock'". The BBC. 28 November 2012. பார்க்கப்பட்ட நாள் 29 November 2012.
  5. Foundations of Science Mathematics பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம். Oxford University Press catalogue entry.
  6. The Rawlings Array. Report 27-Aug-2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டீவென்_இராலிங்சு&oldid=3952036" இலிருந்து மீள்விக்கப்பட்டது