சுண்டிக்குளம்
சுண்டிக்குளம் (Chundikkulam)[1][2] என்பது இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் எல்லைக் கிராமமாகும். இக்கிராமம் சுண்டிக்குளம் தொடுவாய்க்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் 1938 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பறவைகள் சரணாலயம் ஒன்றும் உள்ளது.
கடல் சார்ந்த இப்பிரதேசத்தில் மீன்பிடி பிரதான தொழிலாகும். இறால் பண்ணைகளும்[3] காணப்படுகின்றன.
பாடசாலைகள்
தொகு- சுண்டிக்குளம் வித்தியாலயம்
1998 டிசம்பர் தாக்குதல்
தொகுஈழப்போரின் போது இக்கிராமம் பெரும் அழிவைக் கண்டது. 1995 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினரின் சூரியக் கதிர் நடவடிக்கையின் போது உடுத்துறை, தாளையடி, ஆழியவளை ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இங்கு குடியேறி கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். 1998 டிசம்பர் 2 ஆம் நாள் நண்பகல் அளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் வானூர்திகள் நல்லதண்ணித் தொடுவாய் குடியேற்ற முகாம் மீது ஆறு குண்டுகளை வீசின. இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cuṇṭik-kuḻi, Āmaik-kuḻi, Tāmarak-kuliya, Mudalak-kuliya". TamilNet. June 19, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22507.
- ↑ "Kaṭṭuk-kuḷam, Pallavarāyaṉ-kaṭṭuk-kuḷam, Cēttuk-kuḷam, Āmpal-kuḷam". TamilNet. June 30, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=22610.
- ↑ சுண்டிக்குளம் கடல் நீரேரியில் இறால் வளர்ப்பு பற்றிய கலந்துரையாடல்[தொடர்பிழந்த இணைப்பு], தமிழ்மிரர், 4 செப்டம்பர் 2011
- ↑ Airstrike kills six civilians பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம், தமிழ்கனேடியன், டிசம்பர் 2, 1998