சுதானோட்டி மாவட்டம்
சுதானோட்டி மாவட்டம் ([[ஆங்கிலம்: Sudhanoti District; உருது: سدھنوتی ) என்பது பாக்கித்தானிலுள்ள ஆசாத் காசுமீரின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். சுதாநட்டி என்ற பெயராலும் இம்மாவட்டத்தை அழைக்கிறார்கள் [1]. அட்சரேகை 33 ° 42 '54 "வடக்கு, தீர்க்கரேகை 73 ° 41' 9" கிழக்கு என்ற அடையாள அளபுருக்களில் பாக்கித்தானின் தலைநகரான இசுலாமாபாத்திலிருந்து 90 கிமீ தொலைவில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. ஆசாத் பட்டன் சாலை வழியாக ராவல்பிண்டி மற்றும் இசுலாமாபாத் நகரங்களுடன் சுதானோட்டி இணைக்கப்பட்டுள்ளது.
சுதானோட்டி Sudhanoti | |
---|---|
பாக்கித்தான் மாவட்டங்கள் | |
![]() ஆசாத் காசுமீர் வரைபடம் சுதானோட்டி மீச்சுட்டலுடன் | |
நாடு | ![]() |
தலைமையகம் | பல்லந்தரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 569 km2 (220 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 297,584 |
• அடர்த்தி | 523/km2 (1,350/sq mi) |
நேர வலயம் | பாக்கித்தான் சீர் நேரம் = +5 |
தாலுக்காக்களின் எண்ணிக்கைகள் | 4 |
பல்லந்தரி, பலூச்சு, மேங்கு, திராக்கேல் என்ற நான்கு தாலுகாக்களாக சுதானோட்டி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தலைமையிடமாக பல்லந்தரி நகரம் இயங்குகிறது. கடல்மட்டத்திலிருந்து 1372 மீட்டர் உயரத்திலும், அசாத் பட்டன் வழியாக ராவல்பிண்டி நகரிலிருந்து 97 கிலோமீட்டர் தொலைவிலும் இந்நகரம் அமைந்துள்ளது. சுதானோட்டி மாவட்டம் ராவலாக்கோட்டு நகரத்துடன் 64 கி.மீ. நீளமான சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு தொகு
கிழக்கு ஈரானிய மக்கள் இனத்தைச் சேர்ந்த நவாப் யாசி கான் சுதானோட்டி மண்டலத்தை தோற்றுவித்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியிலிருந்தவர்களுடன் போரிட்டு தாக்கி விரட்டியடித்துவிட்டு அப்பகுதிக்கு சுதானோட்டி என்று பெயரிட்டார். வீரம் என்பதை அடையாளப்படுத்தும் பெயராக சுதன் கருதப்பட்டதால் சுதானோட்டி என்ற பெயரை இவர் எடுத்துக் கொண்டார் [2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "AJ&K Portal". http://www.ajk.gov.pk/site/index.php?option=com_content&task=view&id=2256&Itemid=144.
- ↑ Wikeley, J.M. (1991). Punjabi Musalmans. India: Manohar Publication. பக். 104 - 107. https://books.google.com/books?redir_esc=y&hl=nl&id=lig-AAAAMAAJ&focus=searchwithinvolume&q=Sudhan.