சுதா படேல் (Sudha Patel) 1976 இல் பிறந்த இவர் இந்தியாவின் இளைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்பார்வையற்ற கிராமப் பஞ்சாயத்துத் தலைவராவார். [1] குசராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் சாங்கா கிராமத்தின் [2] பஞ்சாயத்துத் தலைவராக 1995 சூனில் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]. பட்டேல் உலகின் புகழ்பெற்ற பத்து சிறந்த இளம் நபர்கள் (1997) விருதினைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த பெண் பஞ்சாயத்து தலைவரான இந்திய விருது [4], மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஜெகதீஷ் கே படேல் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது .

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அகமதாபாத்திலிருந்து 120 கி.மீ தூரத்தில் குசராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பெட்லாட் வட்டத்தின் சாங்கா கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் படேல் பிறந்தார். [4] இவரது தந்தை முன்பு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். இவரும் இவருடைய சகோதரியும் பிறந்ததிலிருந்து பார்வைக் குறைபாடு உடையவர்களாக இருந்தனர். [5] செல்வத்தின் தெய்வமான லட்சுமியைப் போல அதிர்ஷ்டசாலி என்று சில கிராமவாசிகள் நினைத்ததால், இவர் பிறந்த ஆண்டு ஒரு நல்ல அறுவடை ஏற்பட்டது என்வும், பெற்றோரை சிசுக்கொலையில் இருந்து தடுத்ததால்தான் தான் இன்று உயிரோடு இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சுதா படேல், இந்தியாவின் குசராத்தின் ஆனந்தில் உள்ள சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பட்டதாரியாவார். இவரது பாலினம் மற்றும் இவரது மாற்றுத்திறன் காரணமாக, ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியபோது முதலில் மறுத்தார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று தனது கிராமத்தின் முதல் பெண் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரானார். [6]

தொழில் தொகு

கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் என்பதைத் தவிர, படேல் இப்போது ஆனந்தில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். இது மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு உதவுகிறது. பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் ஆனந்த் கிளையின் கௌரவ பொதுச் செயலாளராகவும், அகமதாபாத்தை தளமாகக் கொண்ட பார்வையற்றோர் மக்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். [7]

கிராமப் பஞ்சாயத்துத் தலைவரார் என்ற முறையில், சுதா உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளார். [5] நீர் பற்றாக்குறையை சமாளிக்க நிலத்தடி நீர் மற்றும் நீர் விசையியக்கக் குழாய்கள் மற்றும் பொது மருத்துவமனைகள் ,மாநாட்டு அரங்குகள் போன்றவற்றைக் கட்டுவதன் மூலம் இப்பணிகளை செய்து வருகிறார். கல்வி மற்றொரு முன்னுரிமை; கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த காலத்தில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பல கணினி வசதி கொண்ட பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. [8] நிறுவனங்களுக்கு ஏரிகளை வாடகைக்கு எடுத்து கிராமத்திற்கு வருமானம் ஈட்டவும் படேல் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களையும் தொடங்கினார். மேலும் இவர் நடத்தும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 10 இலட்சம் இந்திய ரூபாயைத் திரட்டினார்.

படேல் மாற்றுத் திறனாளிகளுக்காக பல திட்டங்களையும் நடத்துகிறார். [9] பெட்லாட் வட்டத்தின் சுமார் 85 கிராமங்களில் புனர்வாழ்வு திட்டங்களை நடத்திய இவர், சுமார் 800 மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்துள்ளார். [10] பார்வையற்றோர் மற்றும் மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இவரது வீட்டுக்கு வீடு மறுவாழ்வு திட்டம் பெற்றோர், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கல்வி மற்றும் புனர்வாழ்வு அணுகுமுறையுடன் பயிற்சி அளித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களை உள்ளடக்கிய கல்விக்கான அரசு வழங்கும் திட்டத்தின் கீழ் கற்பித்திருக்கிறார். [4] [11] மேலும் 80க்கும் மேற்பட்ட பார்வையற்ற குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளார். [12] வருடாந்திர 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதுவதில் பார்வைகுறபாடுடைய மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ சொல்வதை எழுதுபவர்களை ஏற்பாடு செய்வதில் படேலின் பணி பரவலாக பாராட்டப்பட்டது. [13]

கிராம உடற்தகுதியை தனிப்பட்ட நோக்கமாக மாற்றிய படேல், தனது பஞ்சாயத்து மக்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கிறார்.

அங்கீகாரம் தொகு

படேல் தனது பணிக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 1997 நவம்பர் 18, அன்று, உலகின் இளம் நபருக்கான சர்வதேச ஜூனியர் சேம்பர் விருதை வென்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஆண்டு இவர் சர்வதேச ஜூனியர் சேம்பர் வழங்கிய மிகச்சிறந்த இளம் நபர் விருதையும் பெற்றார். பிலிப்பைன்ஸ் அதிபரால் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. [14] புதுதில்லியின் சமூக அறிவியல் கழகத்தின் சிறந்த பெண் பஞ்சாயத்து தலைவர் விருதையும், பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் நீலம் ரங்கா தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "The Tribune, Chandigarh, India - HER WORLD". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-28.
  3. "Hamaara Bharat Mahaan". mahaanbharat.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  4. 4.0 4.1 4.2 Soni, Nikunj (2010-03-09). "Blind, but with the vision of a yogi". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  5. 5.0 5.1 "Read how this blind woman sarpanch from Gujarat is challenging notions about disability & gender". Newz Hook - Changing Attitudes towards Disability (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  6. Rana, Niyati (2007-03-07). "The visionary who changed her village". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  7. Bandyopadhyay, Brishti (2003-03-05). "They See!". Pitara Kids Network (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  8. Bandyopadhyay, Debabrata (2006) (in en). Empowering Women Panchayat Members: Handbook for Master Trainers Using Participatory Approach. https://books.google.co.in/books?id=_aE0m_6uUfcC&pg=PA175&lpg=PA175&dq=sudha+patel+blind&source=bl&ots=pWQ-klzvxl&sig=ACfU3U2maqSpQt22ZXVNM2zfcajB01hnlg&hl=en&sa=X&ved=2ahUKEwjl_riDt-HjAhXQ4HMBHVJvDUA4ChDoATACegQICBAB#v=onepage&q=sudha%2520patel%2520blind&f=false#v=onepage&q=sudha%2520patel%2520blind&f=false. 
  9. Ravi, S. "Unleashing power". https://www.thehindu.com/features/metroplus/stree-shakti-on-doordarshan-national/article6771833.ece. 
  10. "Hamaara Bharat Mahaan". mahaanbharat.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  11. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  12. "Rediff On The NeT: Indian society is blind to a fault". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  13. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  14. "Women Leaders in Panchayats" (PDF).

வெளி இணைப்புகள் தொகு

1) Interview on Doordarshan National in 2014: https://www.youtube.com/watch?v=oyCrbtqde7U 2) Featured as #SheInspiresUs by Government of India in 2020: https://twitter.com/DDNational/status/1235814033577480192

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_படேல்&oldid=2986530" இலிருந்து மீள்விக்கப்பட்டது