சுதிர் குப்தா
சுதிர் குப்தா (Sudhir Gupta; பிறப்பு 19 மே 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்சோர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
சுதிர் குப்தா | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 நவம்பர் 2014 | |
முன்னையவர் | மீனாட்சி நடராஜன் |
தொகுதி | மண்டோசோர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 மே 1959 மண்டோசோர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சதானா |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 2/2, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புதிய அபாதி, மாந்சவூர், மத்தியப் பிரதேசம் |
கல்வி | முதுநிலை வணிகவியல், விக்ரம் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி, வணிகம் |
இளமை
தொகுகுப்தா மண்ட்சௌரில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை இராமச்சந்திர குப்தா ஓர் எண்ணெய் வியாபாரி ஆவார். இவர் இராச்டிரிய சுயம்சேவக் சங்க அமைப்பில் சேர்ந்தார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தீவிர உறுப்பினராக இருந்தார்.
தொழில்
தொகுதனது கல்வியை முடித்த பிறகு, குப்தா மண்ட்சௌரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றினார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். விசுவ இந்து பரிசத் அலுவலக ஊழியராக, இவர் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கேற்றார். உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.[2]
இவர் அகிலப் பாரதிய வைஷி மகா சம்மேளனம், வர்த்தக சபை, மண்ட்சௌர் ஜூடோ பரிசத் மற்றும் பாரத விகாசு பரிசத் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். சரசுவதி சிசு மந்திர் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய அரசின் மதிப்பீட்டுக் குழு, வர்த்தக அமைச்சகத்தின் நிலைக்குழுக்கள் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Parliamentary Election 2014" (PDF). ceomadhyapradesh.nic.in. NIC.
- ↑ "Vishva Hindu Parishad | Official Website | विश्व हिन्दू परिषद". vhp.org. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.