சுதேசுனா சின்கா

சுதேசுனா சின்கா (Sudeshna Sinha) ​​இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார். சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்தார். நேரியல் அல்லாத இயற்பியல் துறையில் இவர் பணிபுரிகிறார். சாவோசு கணக்கீடுகள் என்று அழைக்கப்படும் ஆரம்ப நிலைகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்ட ஓர் இயக்கவியல் அமைப்பு அடிப்படையிலான வன்பொருளை அமெரிக்க நிறுவனமான சாவோலாசிக்சு நிறுவனம் வர்த்தக ரீதியாக உருவாக்கியது.[1] தற்பொழுது இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சு நகரிலுள்ள ஒரு பிரித்தானிய கணினி செயலி மற்றும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.[2]

சுதேசுனா சின்கா
Sudeshna Sinha
தேசியம்இந்தியர்
துறைநேரியல் அல்லாத இயற்பியல்
பணியிடங்கள்கணித அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொகாலி
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
விருதுகள்பி.எம். பிர்லா விருது
துணைவர்கபில் அரி பரஞ்பே
பிள்ளைகள்சுருதி பரஞ்சுபே

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சுதேசுனா சின்கா ​​மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கணிதப் பேராசிரியராக பணிபுரியும் கபில் அரி பரஞ்சபேவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[3] இவரது தாய்வழி தாத்தா முனைவர் பிரபோத் சந்திர பாக்சி, முன்னாள் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், வரலாற்றாசிரியராகவும் இருந்தார்.

கல்வி

தொகு

சுதேசுனா சின்கா 1985 ஆம் ஆண்டில் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றார்.[4] 1990- ஆம் ஆண்டில் மும்பையிலுள்ள டாடா ஆதார ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[5]

தொழில் மற்றும் வெளியீடுகள்

தொகு

​​இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார்.[6] நேரியல் அல்லாத இயக்கவியல், சாவோசு கணக்கீடுகள், வலைப்பின்னல்கள் போன்ற துறைகளில் இவரது ஆராய்ச்சிகள் அமைந்துள்ளன.

விருதுகள்

தொகு
  • 2018-உலக அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். [7]
  • 2016-2020, 2021-2025- ஜகதீசு சந்திர போசு தேசிய உறுப்பினர்[8]
  • 2014-புது தில்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[9]
  • 2010-பெங்களுர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[10]
  • 1998 பி.எம். பிர்லா பரிசு[11]
  • 1995-2000- இத்தாலியிலுள்ள் கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையத்தின் இணை உறுப்பினர்.
  • கான்பூர் அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பொது திறன் பரிசு
  • 1978-1985- தேசிய திறமை தேடல் உதவித்தொகை

மேற்கோள்கள்

தொகு
  1. "IAS - Women in Science". பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  2. "Chaologix".
  3. http://www.imsc.res.in/~sudeshna/personal.html
  4. "Notable Alumni of IIT Kanpur".
  5. "Curriculum Vitae".
  6. "Faculty listing".
  7. "Fellowship of The World Academy of Sciences (TWAS)".
  8. "J C Bose National Fellowship".
  9. "Fellowship of Indian National Science Academy".
  10. "Fellowship of Indian Academy of Sciences".
  11. "Birla Prize".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசுனா_சின்கா&oldid=4017089" இலிருந்து மீள்விக்கப்பட்டது