சுதைச் சிற்பங்கள்

சுதைச் சிற்பங்கள் என்பவை சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். மரக் குச்சிகளும் சுண்ணாம்பும் இச்சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சுதைச் சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன. [1] பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. முற்காலச் சிற்பங்கள் இன்று காணக் கிடைக்காவிட்டாலும் தமிழ் இலக்கியங்களில் அவை பற்றிய செய்திகள் உள்ளன. பரிபாடலில் [2]மதுரையில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த சிற்பங்களையும் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

சுதைச் சிற்பங்கள், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருந்ததையும், இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்ததாகவும் மணிமேகலை கூறுகிறது.

காணப்படும் இடங்கள் தொகு

 
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப்படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோவில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப்பட்டுள்ளது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. "3.6.2 சுதைச் சிற்பங்கள்". Archived from the original on 2020-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
  2. பரிபாடல் 10:43-48
  3. முனைவர் லோ. மணிவண்ணன். "சிதைச்சிற்பங்கள்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 28, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதைச்_சிற்பங்கள்&oldid=3555003" இலிருந்து மீள்விக்கப்பட்டது