சுந்தரம் நயினார் சுந்தரம்
சுந்தரம் நயினார் சுந்தரம் (Sundaram Nainar Sundaram)(3 ஆகத்து 1932 - செப்டம்பர் 2001) ஓர் இந்திய நீதிபதி மற்றும் குசராத்து மற்றும் தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
தொழில்
தொகுநயினார் சுந்தரம் 1932ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவரது தந்தை கெர்பர்ட் சுந்தரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்தார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி மற்றும் பி. எசு. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1955-இல், நயினார் சுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குடிமையியல் மற்றும் குற்றவியல் பிரிவில் பயிற்சியைத் தொடங்கினார். 4 சனவரி 1978-இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நயினார் சுந்தரம் 15 சூன் 1992 அன்று குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[1] இதன்பிறகு இவர் திசம்பர் 1993-இல் தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.[2][3] நீதிபதி நயினார் சுந்தரம் ஓய்வு பெற்ற பிறகு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "High Court of Gujarat". பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Former Judges List". பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Gujarat High Court Recruitment 2020 - District Judge, Civil Judge". பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "After three years, rights panel gets chairperson". https://www.thehindu.com/news/national/tamil-nadu/after-three-years-rights-panel-gets-chairperson/article6606757.ece.