சுந்தர பாண்டியன் (1251-1271) பாட்டு

(சுந்தர பாண்டியன் 1251-1271 பாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுந்தர பாண்டியன் (1251-1271) தில்லை கோயிலில் துலாபாரம் செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் ஒன்று தில்லை கோயில் சுவரில் உள்ளது. தன் எட்டைக்கு எடை பொன்னும் முத்தும் இவன் கோயிலுக்குத் தானமாகத் தந்திருக்கிறான்.

இதனைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல்

இனவரிக் கிம்புரி வெண்பிறை கோட்டிகல் வெங்கடுங்கட்
சினமதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொல் திருவை மணந்ததொக்கும்
கனகத் துலையுடன் முத்தம் துவையில் கலந்ததுவே
(கட்டளைக் கலித்துறை)

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005