சுனயனா ஹசாரிலால்

சுனயனா ஹசாரிலால் அகர்வால் ( Sunayana Hazarilal Agarwal) இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். கதக்கின் பாரம்பரிய நடன வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும், கதக்கின் ஜானகிபிரசாத் கரானாவின் எஞ்சியிருக்கும் ஒரே பயிற்சியாளராவார். இவர் பனாரசு கரானா என்றும் அழைக்கப்படுகிறார். [1] இந்திய அரசு தனது நான்காவது உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை 2011இல் வழங்கி இவரை கௌரவித்தது. [2] மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இவர் இந்தியாவில் கதக் நடனத்தின் முக்கிய விழாக்களில் தவறாமல் நடனங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும் பிற நாடுகளிலும் தனது கலையை வழங்கியுள்ளார். 1974 முதல், மும்பையின் பாரதிய வித்யா பவன் மற்றும் தனது ஆசிரியரும் கணவருமான ஹசரிலால் நிறுவிய நட்வாரி நசன நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தவிர, கதக்கின் பழைய மற்றும் அரிய சில பாடல்களைப் படித்து புதுப்பிக்க பணியாற்றியுள்ளார். அவை இவரது பாரம்பரியத்தின் குருக்களின் பிரதிநிதிகளாகும்.

சுனயனா ஹசாரிலால்
2004இல் சுனயனா
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிகதக் நடனம்
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
அபினநய கலா சரசுவதி
மகாராட்டிர கௌரவ விருது
வலைத்தளம்
Official web site

சுயசரிதை

தொகு

திருமதி சுனயனா ஹசாரிலால் என்கிற சுனயனா அகர்வால் உத்தரபிரதேசத்தின் பரேலியில் 1939இல் மும்பையில் ஒரு இரயில்வே அதிகாரிக்கு மகளாகப் பிறந்தார். சிறீ ஹசாரிலால் கும்பராமின் கீழ் கதக் நடனத்தில் பயிற்சி பெற்றார். சுனயனா ஹசாரிலால் சிறுவயதிலிருந்தே பாரம்பரிய நடனத்தைக் கற்கத் தொடங்கினார். [3] தந்தையின் பணி காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டபோது கதக் கற்கும் ஆசையில் மும்பையைவிட்டு வெளியேர மறுத்த இவர், தனது உறவினர்களுடன் தங்கியிருந்து பனாரசு ஜானகிபிரசாத் கரானாவின் அறியப்பட்ட நிபுணராக இருந்த குரு ஹசாரிலாலின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். [1] சந்திரசேகர் பிள்ளையின் கீழ் பரதநாட்டியம் மற்றும் ஜி. டி. அக்னி மற்றும் சரத்சந்திர அரோல்கர் ஆகியோரிடமிருந்து குரல் இசையையும் கற்றுக்கொண்டார். தனது தனித்துவமான நடன நிகழ்ச்சிகளுக்கு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக அபிநயத்தில் சிறந்து விளங்குகிறார். [4]

தற்போது, நட்வாரி நடன அகாதமியின் இயக்குநராக சுனயனா இருக்கிறார். [5] மும்பையின் பாரதிய வித்யா பவனின் நார்டன் சிக்சா பீடத்த்தில் கதக் பிரிவின் தலைவராகத் தலைமை தாங்குகிறார். இவர் பல நிறுவனங்களில் வருகை தரும் ஆசிரியராகவும் உள்ளார். [3] அமெரிக்காவின் நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் ராலே ஆகிய இடங்களில் நடனப் பட்டறைகளை நடத்திய இவர், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். 1990இல் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகை தரும் ஆசிரியராகவும் இருந்தார்.

நிகழ்ச்சிகள்

தொகு

சுனாயனா மும்பையில் நேரு கலையரங்கத்தில் நடாவாரி நடன அகாதமியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். சுனயனா ஹசாரிலால் ஜானகிபிரசாத் கரானாவின் வம்சாவளியைப் பற்றி ஆராய்ச்சி செய்து தலைப்பில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சந்தீப் சோங்க்ரா, ஷ்ரத்தா கன்னா, அனுஷ்கா ஜாவேரி, வெரோனிகா சிமாஸ் டிசௌசா மற்றும் வேதா ஜோஷி ஆகியோர் இவரது மாணவர்களில் அடங்குவர்.

விருதுகள்

தொகு

சுனாயனாசங்கீத நாடக அகாதமி விருது (2003), பாலசுப்பிரமண்ய சபையைச் சேர்ந்த அபிநய கலா சரசுவதி மற்றும் மகாராட்டிர கௌரவ விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். [1] சுனயனாவை 2011 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Kathak.org". Kathak.org. 2014. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
  2. 2.0 2.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  3. 3.0 3.1 "Interview". Narthaki.com. 13 April 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  5. "Performance". Video. YouTube. 3 July 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனயனா_ஹசாரிலால்&oldid=3750863" இலிருந்து மீள்விக்கப்பட்டது