சுனிதா துக்கல்

இந்திய அரசியல்வாதி

{{Infobox officeholder

| name =

Sunita Duggal
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்சரண்ஜீத் சிங் ரோரி
தொகுதிசிர்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1968 (1968-04-29) (அகவை 55)
ரோத்தக், அரியானா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராஜேஸ் துக்கல் (அரியானா இகாப)
பிள்ளைகள்நவ்சீன் & நீவா துக்கல்
வேலைஅரசியல்வாதி
மூலம்: [1]

சுனிதா துக்கல் (Sunita Duggal)(பிறப்பு: ஏப்ரல் 29, 1968) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சிர்சா நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியானாவின் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

துக்கல் வருமான வரித்துறையில் 22 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இவர் 2014-ல் வருமான வரி உதவி ஆணையராக இந்திய வருவாய் சேவையிலிருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றார். இவரது கணவர் அரியானா தொகுப்பு இந்தியக் காவல் சேவை அதிகாரி ஆவார். துக்கல் 2014ஆம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ராட்டியா தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் வெறும் 453 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவரது நல்ல கல்விப் பின்னணி மற்றும் அதிகாரத்துவ அனுபவத்தின் காரணமாக இவர் அரியானா அரசாங்கத்தில் அரியான பட்டியல் இனத்தவர் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Hisar Election Results 2019 Live Updates (Hissar): Brijendra Singh of BJP Wins", Daily News and Analysis, 23 May 2019
  2. "Sunita Duggal: Preferring quality over quantity". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_துக்கல்&oldid=3890477" இலிருந்து மீள்விக்கப்பட்டது