சுனிதா தேவி

மாதிரிக் கலைஞர்

சுனிதா தேவி (Sunita Devi) (1897கள் - 3 நவம்பர் 1932), உண்மையான பெயர் அர்மினா பீர்பாய், பொதுவாக சுனிதா என்று அழைக்கப்படுகிறார. இலண்டனில் இருந்த சிற்பி ஜேக்கப் எப்சுடீனுக்கு மாதிரிக் கலைஞராக இருந்தார். [1] 3 நவம்பர் 1932 இல் இந்தியாவில் நடந்த இவரது மரணம் ஒரு அரசியல் படுகொலை என்று சிலர் நம்பினர்.[2]

சுனிதா தேவியும் ஜேக்கப் எப்சுடீனும் 1925கள்
ஜேக்கப் எப்ஸ்டீன் செதுக்கிய சுனிதாவின் மார்பளவு சிலை 1926கள்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

காஷ்மீரைச் சேர்ந்த சுனிதா, மும்பையின் செல்வந்தர் அகமது பீர்பாய் என்பவரை மணந்தார். பின்னர், 1920களின் முற்பகுதியில் தனது கணவரை விட்டு பிரிந்து மகன் என்வருடனும் தங்கை அனிதா பட்டேலுடனும் இங்கிலாந்து சென்றார். 'மேஸ்குலின் சகோதரர்கள்' என்று அழைக்கப்படும் மாயவித்தை செய்பவர்களின் குழுவில் சகோதரிகள் சேர்ந்தனர். அக்குழுவில் சுனிதா ஒரு நீர்த்தொட்டியில் முழுமையாக மூழ்கி ஐந்து நிமிடங்கள் கழித்து எழுந்து வரும் ஒரு சாகச நிகழ்ச்சியை செய்து வந்தார் (வெளிப்படையான காற்று குழாய் உதவியுடன்).[3] பிரிட்டிசு எம்பயர் கண்காட்சியிலும் சில சாகசங்களையும் செய்தனர் (1924 முதல் 1925 வரை).[3] சுனிதா ஒரு ஆளுமையை உருவாக்கி தன்னை ஒரு இந்திய மாயவாதியாகவும் சோதிடராகவும் நிலைநிறுத்தி ;இளவரசி சுனிதா; என அறியப்பட்டார்.[2]

மத்தேயு ஸ்மித் தொகு

சுனிதா, 1924 முதல் மேத்யூ சுமித் என்ற ஓவியருக்கு மாதிரியாக இருந்தார். வெறும் கலைஞர், மாதிரி என்பதைத் தாண்டி அவர்களின் உறவு மலர்ந்தது.[3] 1924 இல் சுமித் சிவப்பு புடவையிலும், [4] கறுப்பு புடவையிலும் இருப்பது போன்ற வடிவங்களில் இவரை வரைந்தார்.[5]

ஜேக்கப் எப்சுடீன் தொகு

ஜேக்கப் எப்சுடீன் என்ற சிற்பக் கலைஞர் பிரிட்டிசு எம்பயர் கண்காட்சியில் சுனிதாவை அவரது நண்பர் மத்தேயு சுமித் மூலமாக சந்தித்தார். 1925இல் எப்சுடீன் சுனிதாவையும் அவரது மகன், சகோதரி ஆகியோரை தனது மனைவி மார்கரெட்டின் ஒப்புதலுடன் இலண்டனில் உள்ள கில்ஃபோர்ட் தெருவில் உள்ள தனது வீட்டில் வாழ அழைத்து வந்தார்.[3] எப்ஸ்டீனுக்கு இவரது சகோதரி மீது காதல் ஆர்வம் இருந்ததா என்பது தெளிவாக இல்லை.

எப்சுடீன் 1926 மற்றும் 1927இல் என்வரின் முகத்தையும் (இரண்டு முறை) சுனிதாவின் முகத்தையும் செதுக்கினார். சுனிதாவும் என்வரும் எப்சுடீனின் மடோனா அண்ட் சைல்டு சிற்பத்திற்கு மாதிரியாக இருந்தனர் (1927). எனினும் எப்சுடீனுக்கு என்வருடன் பணி செய்ய மிகவும் சிரமமாக இருந்தது. அவர் பணியில் ஒப்பீட்டளவில் சுனிதாவை அழகாக நினைத்தார். ஆனால் ஜோசப் துவீன் என்ற கலை வியாபாரி இவரது மடோனா அன்ட் சைல்ட் என்ற சிற்பத்தை முதன்முதலில் பார்த்தபோது, "நீங்கள் ஏன் ஒரு அழகான மாதிரியை தேர்வு செய்யவில்லை?" என்று எப்சுடினிடம் வினவினார்.[6] சிற்பத்திற்கும் கூடுதலாக, சுனிதா, என்வர், அனிதா ஆகியோரின் 100க்கும் மேற்பட்ட வரைபடங்களும், நீர்வர்ணங்களும் இருந்தன.[3]

இறப்பு தொகு

1931இல் சுனிதா இந்தியா திரும்பினார். அமெரிக்க பத்திரிகைகளின் கூற்றுப்படி, "நான் என் மரணத்திற்கு போகிறேன்; அது அப்படித்தான் என்று எனக்குத் தெரியும்" என்று கூறினார். 1932இல் இவர் "குடல் அழற்சியால்" இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே இவரை அறிந்தவர்கள் இவர் நஞ்சு அருந்தியிருக்கலாம் என்றும், வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்பாளர்களுடனான இவரது நெருக்கம் இவர் ஒரு உளவாளியாக பார்க்கப்பட்டதாகவும் கருதினர்.[2] [7] [8]

மேற்கோள்கள் தொகு

  1. Gardiner, Stephen. (1993) Epstein: Artist Against the Establishment. London: Flamingo, pp. 261-2. ISBN 000654598X
  2. 2.0 2.1 2.2 "Beautiful Indian Model Killed as Spy, Those Who Know Her Say," A. John Kobler Jr., The Daily Pantagraph, 4 November 1932, p. 1.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Gardiner, Stephen. (1993) Epstein: Artist Against the Establishment. London: Flamingo, pp. 261-2. ISBN 000654598XISBN 000654598X
  4. Sir Matthew Smith (1879-1959) The Red Sari, Sunita Reclining. Christie's. Retrieved 26 October 2014.
  5. "The Black Sari": Sunita Wearing a Black Sari. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Collage. Retrieved 26 October 2014.
  6. Epstein, Jacob. (1940) Let There Be Sculpture. New York: Putnam, pp. 114–115.
  7. "Reaper Claims Life of Another Epstein Model" William Hillman, Sarasota Herald, 5 December 1932, p. 6. Retrieved 26 October 2014.
  8. "Tragic Fates Haunt Paths of Great Sculptor's Models" William Hillman, The Milwaukee Sentinel, 26 November 1932, p. 3. Retrieved 26 October 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_தேவி&oldid=3367611" இலிருந்து மீள்விக்கப்பட்டது