சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:Subbalakshmi Lakshmipathi College of Sciences) என்பது மதுரையில் உள்ள தன்னாட்சி பெற்ற தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரியின் தலைவராக ஆர். லட்சுமிபதியும் செயலாளராக எல். ராமசுப்புவும் துணைச் செயலாளராக எல். ஆதிமூலமும் உள்ளனர்.[2]

சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1994
தலைவர்ஆர். லட்சுமிபதி
அமைவிடம்
அருப்புக்கோட்டை சாலை, அவனியாபுரம்
இணையதளம்slcs.edu.in

தினமலர் நாளிதழின் நிறுவனர் டி. வி. இராமசுப்பையரின் மகனான ஆர். லட்சுமிபதி 1989 ஆம் ஆண்டு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவினார்.[3] அந்த அறக்கட்டளையின் சார்பாக 1994 ஆம் ஆண்டு இக்கல்லூரியும் 1995 ஆம் ஆண்டு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி என்ற பள்ளியும் தொடங்கப்பட்டது.[4] 1998 இல் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி ஏஐசிடிஈ அங்கீகாரத்தைப் பெற்றது. 2000 இல் என்ஏஏசி தரமதிப்பீடு பெற்றது. 2006 இல் யூ. ஜி. சியில் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றது. தென் தமிழகத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற முதல் தனியார் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

துறைகள்

தொகு

இக்கல்லூரியில் உள்ள துறைகள்.

  • இயங்குபடத் துறை
  • கணினி அறிவியல் துறை
  • வணிக நிர்வாகவியல் துறை
  • வணிகவியல் துறை
  • பிணையத் துறை
  • காட்சித் தொடர்பியல் துறை
  • கடல் சமையல் மற்றும் ஓட்டல் மேலாண்மைத் துறை
  • தீ மற்றும் தொழிலகப் பாதுகாப்புத் துறை
  • உணவு அறிவியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை


மேற்கோள்கள்

தொகு
  1. "Self Finance Autonomous Colleges (04)". மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
  2. "ஆட்சிக் குழு". slcs.edu.in. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
  3. "R. LAKSHMIPATHY". rlins.edu.in. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
  4. "Krishnamal Ramasubbaiyer School". bynearme.com. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.