சுப்பிங்
சுப்பிங் (Chuping) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள சிறிய நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 22,000 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் தோட்டங்களும் கரும்புத் தோட்டங்களும் உள்ளன.[1] மலேசியாவின் மிகப்பெரிய கரும்பு தோட்டங்கள் இங்குதான் உள்ளன.[2]
சுப்பிங் Chuping | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
சுப்பிங் நகருக்கு அருகில் புக்கிட் சுப்பிங் (Bukit Chuping) என்று அழைக்கப்படும் ஒரு சுண்ணாம்பு மலை உள்ளது. அந்த மலையின் பெயரில் இருந்து சுப்பிங் நகரின் பெயர் வந்து இருக்கலாம். இந்தப் பகுதியில் பல சுண்ணாம்பு மலைகள் உள்ளன.
சுப்பிங் சுண்ணாம்பு மலைகள்
தொகுஅந்தச் சுண்ணாம்பு மலைகளின் குகைகளில் வெளவால்கள் நிறையவே உள்ளன. வௌவால்களின் சாணத்தில் அதிகமான நைட்ரேட்டுகள்; இரும்பு; பாஸ்பேட் போன்றவை உள்ளன. அவை நெல் போன்ற பயிர்களுக்கு, உரமாகப் பயன்படுத்தப் படுவதற்கு சேகரிக்கப் படுகின்றன.
கங்கார் மற்றும் கோடியாங் நகரத்திற்குச் செல்லும் சாலையில் இருந்து சுப்பிங் நகருக்குப் போகலாம். கோலா பெர்லிஸ் - கங்கார் சாலையில் பயணிக்கும் பேருந்துகள் இந்த நகரத்தின் வழியாகத்தான் செல்கின்றன.[1]
வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) நெடுஞ்சாலையில், அடுத்து வரும் ஜித்ரா சாலையில் இருந்து சுப்பிங் நகருக்குச் செல்லலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Chuping Sugarcane Plantation". Virtual Malaysia. Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.
- ↑ "Exploring Chuping Sugar Cane Plantation, Perlis". AsiaExplorers. Archived from the original on 2010-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.