சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடி

சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டுக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

நுழைவாயில் வளைவு

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருவாரூர்-வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.[2]

சன்னதிகள்

தொகு

இக்கோயிலில் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சௌந்திரராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, அய்யப்பன், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. வான்மீகர் என்ற சித்தர் இங்கு சமாதியானதாகக் கூறுவர். மூலவர் கருவறையில் முருகன், வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்துள்ளார். மூலவர் அமர்ந்துள்ள மயில் சிற்பத்திற்கு ஆதாரமாக தரையின்மீதுள்ள அதன் இரு கால்கள் உள்ளன. [3] முருகன் சன்னதிக்கு வலது புறத்தில் லிங்கத்திருமேனியை கருவறையில் கொண்ட சௌந்தரேசுவரர் சன்னதியும், இடது புறத்தில் இறைவி ஆனந்தவல்லி அம்மன் சன்னதியும் உள்ளன. கோயிலின் முன்பாக கோயில் குளம் உள்ளது.

விழாக்கள்

தொகு

இக்கோயிலில் சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் ஒன்றுசேர கடைபிடிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, வைகாசியில் நாளும் ஒரு விழா, கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூசை உள்ளிட்டவை கொண்டாடப்படுகின்றன.[3]

நடை நேரம்

தொகு

இக்கோயில் காலை 4.30 முதல் நடுப்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

புகைப்படத்தொகுப்பு

தொகு