சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம்
சுப்பிரமணியம் பூங்கா எனப் பொதுவாக அறியப்படும் சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு நகர்ப்புறப் பூங்கா. இது யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.
சுப்பிரமணியம் பூங்கா | |
---|---|
Subramaniam Park | |
வகை | நகரப் பூங்கா |
அமைவிடம் | யாழ்ப்பாணம், இலங்கை |
இயக்குபவர் | யாழ்ப்பாண மாநகரசபை |
வரலாறு
தொகுசுப்பிரமணியம் பூங்கா, 1950களில் அப்போதைய யாழ்ப்பாணம் நகரசபையால் உருவாக்கப்பட்டது. உள்ளூர் மருத்துவரான எஸ். சுப்பிரமணியம் இதற்குத் தேவையான பெருந்தொகைப் பணத்தை நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.[1][2] இதனால் இப்பூங்காவுக்கு அவருடைய பெயரில் சுப்பிரமணியம் பூங்கா எனப் பெயரிடப்பட்டது.[1] பின்னாளில் உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி. தர்மலிங்கம் இவருடைய மருமகன்.[1]
உள்நாட்டுப் போர்க் காலத்தில் இது பெருமளவு சேதம் அடைந்தது. குறிப்பாக 1990ல் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகளில் இது முற்றாகவே அழிவுற்றது.[2][3] தொடர்ந்து 14 ஆண்டுகள் பயன்படாமல் இருந்த இப்பூங்கா 2004 ஆம் ஆண்டில், யுனிசெவ் வழங்கிய 2 மில்லியன் இலங்கை ரூபாவைப் பயன்படுத்தி திருத்தி அமைக்கப்பட்டது.[3] திருத்தப்பட்ட பூங்காவை 2006 மே 7ம் தேதி அப்போதைய மாவட்டச் செயலாளர் கே. கணேஷ் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.[4] 2010ல் பூங்காவின் முக்கிய அம்சமாக இருந்த அலங்கார நீரூற்று கொழும்பைச் சேர்ந்த தனியார் நிறுவனமான எல். பி. பினான்ஸ் நிறுவனத்தினால் திருத்தி அமைக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 213.
- ↑ 2.0 2.1 "Subramanium Park in all its former glory". Ceylon Today. 18 March 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000105/http://www.ceylontoday.lk/51-27291-news-detail-subramanium-park-in-all-its-former-glory.html.
- ↑ 3.0 3.1 "affna Subramaniam Park under renovation". TamilNet. 6 September 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12819.
- ↑ Kathirgamathamby, S. (8 May 2006). "Leisure park in Jaffna after fifteen years". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703022159/http://www.dailynews.lk/2006/05/08/news25.asp.
- ↑ "LB Finance In Jaffna". The Sunday Leader. 31 October 2010 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303221742/http://www.thesundayleader.lk/2010/10/31/lb-finance-in-jaffna/.