சுப்புராமன் மீனாட்சி

சுப்புராமன் மீனாட்சி (பிறப்பு 24 அக்டோபர் 1981), ஒரு இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

சுப்புராமன் மீனாட்சி
நாடுஇந்தியா
பிறப்பு24 அக்டோபர் 1981 (1981-10-24) (அகவை 43)
புது டில்லி, இந்தியா
பட்டம்பெண் கிராண்ட்மாஸ்டர் (2004)

சுயவிவரம்

தொகு

சுப்பராமன் மீனாட்சி இந்திய செஸ் பெண் கிராண்ட்மாஸ்டர் சுப்பராமன் விஜயலட்சுமியின் இளைய சகோதரி ஆவார். 1991 முதல் 2001 வரை, அவர் ஆசியா மற்றும் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் பல்வேறு வயது பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். 1998 ஆம் ஆண்டில், ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் சுப்பராமன் மீனாட்சி U-20 பெண்கள் வயது பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2001 ஆம் ஆண்டில், இந்த போட்டியில் தனியா சச்ச்தேவுடன் 2 மற்றும் 3 வது இடங்களைப் பகிர்ந்து கொண்டார். 2000 ஆம் ஆண்டில், இந்திய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2002 ஆம் ஆண்டில்,பிடே உலகக் கோப்பையில் அவர் காலிறுதி வரை சென்றார். காலிறுதியில் அவரை சூ யூஹுவா வீழ்த்தினார். [1] 2004 இல், பெய்ரூட்டில் சுப்பராமன் மீனாட்சி ஆசிய மகளிர் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். [2]

2000 களில் சுப்பராமன் மீனாட்சி மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் நாக்-அவுட் முறையில் பங்கேற்றார்:

  • மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2000 ல் முதல் சுற்றில் எலெனா ஜயாட்ஸிடம் தோற்றார், [3]
  • மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2004 இல் முதல் சுற்றில் இவெட்டா ராட்சீவிச்ஸிடம் தோற்றார், [4]
  • மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2006 இல் முதல் சுற்றில் டாடியானா கொசிந்த்சேவாவிடம் தோற்றார், [5]
  • மகளிர் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் 2010 இல் முதல் சுற்றில் மாயா சிபுர்தனிட்சேவிடம் தோற்றார். [6]

சுப்பராமன் மீனாட்சி இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகள்:

  • பெண்கள் சதுரங்க ஒலிம்பியாட் 3 முறை (2000-2002, 2010)பங்கேற்றார்; [7]
  • 2003 ஆம் ஆண்டில் பெண்கள் ஆசிய அணி சதுரங்க சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று தனிப்பட்ட வெண்கலப் பதக்கம் வென்றார்; [8]
  • 2003 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்; [9]
  • ஆசிய உட்புற விளையாட்டுகளில் 2007 இல் பங்கேற்று அணி வெள்ளிப் பதக்கம் வென்றார். [10]

2001 ஆம் ஆண்டில்,அவருக்கு பிடே சர்வதேச பெண்கள் மாஸ்டர் (WIM) பட்டம்வழங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிடே சர்வதேச மகளிர் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தைப் அவருக்கு வழங்கியது.

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The Week in Chess 415". www.theweekinchess.com.
  2. "The Week in Chess 529". www.theweekinchess.com.
  3. "2000 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  4. "2004 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  5. "2006 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  6. "2010 FIDE Knockout Matches : World Chess Championship (women)". www.mark-weeks.com.
  7. OlimpBase :: Women's Chess Olympiads :: Subbaraman Meenakshi
  8. OlimpBase :: Women's Asian Team Chess Championship :: Subbaraman Meenakshi
  9. OlimpBase :: Asian Games (chess - women) :: Subbaraman Meenakshi
  10. OlimpBase :: Asian Indoor Games (chess) :: Subbaraman Meenakshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்புராமன்_மீனாட்சி&oldid=3434753" இலிருந்து மீள்விக்கப்பட்டது