சுமங்கலி சத்தியநாதீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சுமங்கலி சத்தியநாதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், சுமங்கலி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சத்தியநாதீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:சுமங்கலி, செய்யார் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செய்யார்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:சத்திநாதீஸ்வரர்
தாயார்:சுமங்கலி அம்மன்
குளம்:கோமசிவன் குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:சோமவாரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அமைவிடம்

தொகு

இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து கலவை போகும் வழியில் 19 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

அளவில் சிறியதாக இக்கோயிலுக்கு கிழக்கு, தெற்கு என இரு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயிலுக்கு முன்பு நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வாயிலையடுத்து முக மண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறையில் சத்திநாதீஸ்வரர் இலிங்க வடிவில் உள்ளார். கருவறைக்கு முன்பு பிள்ளையாரும் வள்ளி, தெய்வாணையுடன் முருகரும் உள்ளனர். சுமங்கலி அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில் அம்மன் நான்கு கரங்களுடன் உள்ளார். பின்னிருக் கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டும், முன்னிரு கரங்கள் அபய வரத முத்திரைகளோடு உள்ளார்.[2]

நுழைவாயிலின் மேற்குபகுதியில் ரிஷபாரீடர் அம்பிகையுடன் உள்ளார். சுற்றுப் பிரகாரத்தில் நவக்கிரகங்கள், பஞ்சகோட்டங்களின் தெய்வங்கள், சண்டிக்கேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் கோமசிவன் குளம் என்ற தீர்த்தம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் சோமவாரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் சுமங்கலி திருத்தலம்". 2024-03-14. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)