சுமதி மூர்த்தி

சுமதி மூர்த்தி (Sumathi Murthy) இவர் பெங்களூரை தளமாகக் கொண்ட ஓர் இந்துஸ்தானி இசைப்பாடகரும், இசையமைப்பாளரும் மற்றும் அகனள், அகனன், ஈரர், திருனர்களின் ஆர்வலரும் ஆவார். [1] இவர் ஆக்ரா கரானா என்ற பாடல் வகையைப் பாடும் இசைக் கலைஞராவார். மேலும், வினோதமானவர்களின் உரிமைகள் இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். [2]

சுமதி மூர்த்தி
தேசியம்இந்தியன்
பணிஇசைக்கலைஞர், இசையமைப்பாளர், அகனள், அகனன், ஈரர், திருனர்களின் ஆர்வலர்

இசை வாழ்க்கை தொகு

இவர் 12 வயதிலிருந்தே தனது இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார். [2] பண்டிட் இராமராவ் நாயக்கிடமிருந்து 17 ஆண்டுகள் இசைப்பயிற்சியைப் பெற்றுள்ளார். இவர் இந்தியா முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும், பல முக்கிய இசை விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். பி.ஜெயஸ்ரீ போன்ற பிரபல நாடக பிரமுகர்களுடன் பணியாற்றிய இவர், பல்வேறு நாடகக் குழுக்களுக்கும் இசையமைத்துள்ளார். சுமதி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். https://bangalore.afindia.org/khayal-and-thumris-by-sumathi-murthy/ பரணிடப்பட்டது 2020-02-15 at the வந்தவழி இயந்திரம்

சுமதி மூர்த்தியின் குரு, மறைந்த பண்டிட் இராமராவ் நாயக், ஆக்ரா கரானா உஸ்தாத்துகளான உஸ்தாத் அட்டா உசேன் கான் மற்றும் உஸ்தாத் பயாசு கான் ஆகியோரிடமிருந்து இந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமதி மூர்த்தி கைம்முரசு இணை மேதை பண்டித் குரு மூர்த்தி வைத்யாவுடனும், ஆர்மோனிய இசைக் கலைஞர் சிறீ எஸ்.ஆர். இராமகிருட்டிணன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஆக்ரா கரானா பாணி மிகவும் ஆண்பால் பாணி என்று புரிந்து கொள்ளப்பட்டாலும். ஜோஹ்ரா பாய் அகர்வாலி போன்ற சில கலைஞர்கள் இந்த வகையை மிகவும் தனித்துவமான முறையில் ஆராய்ந்துள்ளனர். ஆக்ரா கரானா காயலின் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அதன் விளக்கத்திற்காக அறியப்படுகிறது. இது கேட்பவர்களுக்கு பாடல் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது ஒரு சுருக்கமான காட்சி அனுபவத்தை உருவாக்குகிறது.

முனைவர் புளோ என்பவருடன் இணைந்து சாகிரி என்ற திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார், இது பாலினங்கள், மின்னணுவியல், காட்சி படங்கள், கவிதை மற்றும் இசை ஆகியவற்றைக் கலக்கும் பல ஊடக நிகழ்ச்சியைக் கொண்டுள்ளது. இவர் இந்த திட்டத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் மற்றும் பாடல் எழுதுபவராகவும் பணியாற்றினார். [2]

வினோதமான செயல்பாடு தொகு

2006 ஆம் ஆண்டில், இலெசுபிட் என்ற பெயரில் பிறந்த வினோதமான பெண்களுக்காக இவர் ஒரு ஆதரவுக் குழுவை உருவாக்கினார். இவரும் சுனில் மேனன் என்பவரும் இந்த வினோதமானவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள வாய்வழி வரலாற்றுத் திட்டத்தை செய்து வருகின்றனர். தென்னிந்தியாவில் பிறந்த பெண் பாலினம் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை மையமாகக் கொண்ட பாலின உள்ளடக்கம் நோக்கி புத்தகத்தை இவர்கள் இணைந்து கூட்டாக எழுதியுள்ளனர். [3]

அகனள், அகனன், ஈரர், திருனர்களின் சமூகம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377 இன் தாக்கம் பற்றி பேசிய பிரேக்கிங் ஃப்ரீ என்ற ஆவணப்படத்திலும் மூர்த்தி இடம் பெற்றுள்ளார். [4]

வெளியீடுகள் தொகு

பாலினத்தின் "பாரம்பரிய" கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக சமூக-கலாச்சாரங்களில் ஊடுருவியுள்ளதால், கலை நிகழ்ச்சிகள் சமுதாயத்தின் மற்ற பகுதிகளைப் போலவே ஒரே மாதிரியாக வேரூன்றியுள்ளன. இதற்கு விடையிறுக்கும் விதமாக "டுவேர்ட்ஸ் ஜென்டர் இன்குளூசிவ்லி" (பாலின உள்ளடக்கத்தை நோக்கி): பாலினத்தைச் சுற்றியுள்ள தற்கால கவலைகள் பற்றிய (சுனில் மோகனுடன்) ஆய்வுப் பணிகளைப் பற்றிய ஆராய்ச்சியினை வெளியிட்டுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. "Khayal and Thumris by Sumathi Murthy". Archived from the original on 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-15.
  2. 2.0 2.1 2.2 "Pink Pages".
  3. Velayanikal, Malavika. "Freedom takes many forms".
  4. Parande, Shweta (2015-10-09). "Breaking Free trailer: Sridhar Rangayan's LGBT documentary against Section 377". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதி_மூர்த்தி&oldid=3555088" இலிருந்து மீள்விக்கப்பட்டது