சுமாத்திர கேளையாடு
சுமாத்திர கேளையாடு | |
---|---|
சுமாத்திர கேளையாடு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மு. முண்ட்ஜேக்
|
துணையினம்: | மோண்டனசு
|
இருசொற் பெயரீடு | |
முண்டியாகசு முண்ட்ஜேக் | |
Geographic range |
சுமாத்திர கேளையாடு (Sumatran muntjac)(முண்டியாகசு முண்ட்ஜேக் மோண்டானசு) என்பது மான் குடும்பத்தில் உள்ள இந்திய கேளையாடின் ஒரு கிளையினமாகும். இது ஒரு பெரிய நாயின் அளவில் இருக்கும். இது 1914ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 2002ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ராவில் உள்ள கெரின்சி செப்லாட் தேசிய பூங்காவில் வேட்டைக்காரர் ஒருவரால் கண்டுபிடிக்கப்படும் வரை 1930ஆம் ஆண்டு முதல் காணப்படவில்லை. சுமாத்திர கேளையாடு 2008-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் சேர்க்கப்பட்டது.[2] ஆனால் வகைபிரித்தல் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால் தரவுகள் போதாது எனப் பட்டியலிடப்பட்டது.[1] (இது ஒரு தனித்துவமான சிற்றினமாகக் கருதப்படுகிறது. மு. மோண்டானசு அல்லது துணையினம் மு. முண்ட்ஜேக் மோண்டானசு). இந்த சிற்றினத்தின் பரவல் நிச்சயமற்றதாகவும் பரிந்துரைக்கப்பட்டதை விட விரிவானதாக இருக்கலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Timmins, R.J.; Duckworth, J.W.; Groves, C.P. (2016). "Muntiacus montanus". IUCN Red List of Threatened Species 2016: e.T136831A22168363. https://www.iucnredlist.org/species/136831/22168363. பார்த்த நாள்: 9 June 2022.
- ↑ """Lost" deer rediscovered in Indonesia"". Reuters. 2008-10-10. https://www.reuters.com/article/environmentNews/idUSTRE4995GN20081010.