சுமி கியாட்சே அருவி
சுமி கியாட்சே அருவி (Chumi Gyatse Falls)[a] அல்லது சுமிக் கியாட்சே) என்பது இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் மாவட்டத்தில், சீனாவின் திபெத் பகுதியின் எல்லைக்கு அருகில் உள்ள அருவிகளின் தொகுப்பாகும்.[2][3] உள்ளூர் பௌத்த பாரம்பரியத்தின் படி, மலைகளுக்கு இடையிலிருந்து தோன்றும் 108 புனித நீர் அருவிகள் திபெத்திய பௌத்த அறிஞர் பத்மசாம்பவரின் ஆசீர்வாதத்தை குறிக்கிறது.[4] சுமி கியாட்சே அருவியானது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நடைமுறை எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. ஒரு கணக்கின்படி வெறும் 250 மீட்டர் தொலைவில் உள்ளது.[5][b]
சுமி கியாட்சே அருவி | |
---|---|
அருணாசலப் பிரதேசத்தில் அருவியின் அமைவிடம் | |
அமைவிடம் | தவாங், அருணாசலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 27°46′34″N 91°58′58″E / 27.7762°N 91.9829°E |
நிலவியல்
தொகுசுமி கியாட்சே அருவி யாங்சே [c] என்ற பகுதியில் உள்ளது. அங்கு திபெத்திலிருந்து சோனா சூ ஆறு இந்தியாவின் தவாங் மாவட்டத்தில் பாய்கிறது. அவை கிழக்கு-மேற்கு மலைத்தொடரால் உருவாக்கப்பட்ட உயரமான பீடபூமியின் ("யாங்சே பீடபூமி") குன்றின் முகத்தில் உள்ளன. அதன் நீர்நிலையானது மெக்மோகன் கோட்டின்படி இந்தியா-சீனா எல்லையாக செயல்படுகிறது.[7]
வடக்கே சில நூறு மீட்டர்கள் அருகே அமைந்துள்ள, தோம்சாங் (அல்லது தோங்சாங்) (27°46′49″N 91°58′37″E), என்ற இடம் குரு பத்மசாம்பவருடன் தொடர்புடைய பௌத்த தியான தலமாகும்.[8] வரலாற்றுக் காலத்தில் தோம்சாங் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. அதனால் அதன் கீழ் உள்ள ஆறு மற்றும் பள்ளத்தாக்குக்கு "தோம்சாங்ரங்" என்று பெயர் கொடுக்கப்பட்டது.[9][10] சீனா தொடர்ந்து "தோம்சாங் ஆறு" மற்றும் "தோங்சாங் அருவி" என்ற பெயர்களைப் பயன்படுத்துகிறது.[3][11]
அருவிகளுக்கு தெற்கே, யாங்சே பீடபூமியில் இருந்து எழும் நியுசரோங் எனப்படும் மற்றொரு ஆறு சோனா சூ என்ற ஆற்றுடன் இணைகிறது. சேச்சு என்று அழைக்கப்படும் ஒரு கிராமம், யாங்ட்சே பிராந்தியத்தின் முனையத்தைக் குறிக்கும் வகையில், இரு ஆறுகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[12]
2018 ஆம் ஆண்டு தொடக்கம் அருணாச்சல பிரதேச மாநிலம் அருவியை சுற்றுலா தளமாக மேம்படுத்தி வருகிறது. [13] தவாங் நகரத்திலிருந்து எளிதாகப் பயணிக்க புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. [13] ஜூலை 2020 இல், பத்மசாம்பவர் சிலையுடன் கூடிய கற்றல் மையம் ஒன்று திறக்கப்பட்டது. திபெத்திய யாத்ரீகர்கள் அருவியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சீனா அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. [13]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tawang district DC Kesang Ngurup Damo visits border village, The Sentinel, 31 March 2022.
- ↑ Manoj Joshi (14 December 2022). "Scale of the Recent Chinese Intrusion in Tawang Is a Cause for Concern". The Wire. https://thewire.in/security/scale-of-the-recent-chinese-intrusion-in-tawang-is-a-cause-for-concern.
- ↑ 3.0 3.1 Hemant Adlakha (16 December 2022), "The Tawang Clash: The View From China", The Diplomat, ProQuest 2754866279
- ↑ Shantanu Dayal (December 15, 2022). "Why Yangtse? At LAC, a long saga of military grit". Hindustan Times.
- ↑ Karishma Hasnat (20 October 2020). "This Arunachal waterfall near LAC is being developed for tourism. But China 'keeping an eye'". The Print. https://theprint.in/india/this-arunachal-waterfall-near-lac-is-being-developed-for-tourism-but-china-keeping-an-eye/526953/.
- ↑ AP, Indian, Chinese troops clash at border in fresh faceoff, NBC News, 13 December 2022.
- ↑ Shantanu Dayal (15 December 2022), "Why Yangtse? At LAC, a long saga of military grit", The Hindustan Times, ProQuest 2754518605
- ↑ "Geographical names of Tibet AR (China): Tibet Autonomous Region". KNAB Place Name Database. Institute of the Estonian Language. 2018-06-03.
- ↑ Aris 2012, ப. 85-86.
- ↑ Tenpa 2018, ப. 52-53, 125.
- ↑ Joseph P. Chacko, Did PLA grab Chumi Gyatser waterfall or Dongzhang Waterfall in Arunachal Pradesh?, Frontier India, 23 January 2022.
- ↑ *Praveen Swami (14 December 2022), "Tawang skirmish shows LAC's volatile. Army risking getting mired in Siachen-style resource trap", The Print
- ↑ 13.0 13.1 13.2 Karishma Hasnat (20 October 2020). "This Arunachal waterfall near LAC is being developed for tourism. But China 'keeping an eye'". The Print. https://theprint.in/india/this-arunachal-waterfall-near-lac-is-being-developed-for-tourism-but-china-keeping-an-eye/526953/.
உசாத்துணை
தொகு- Aris, Michael (2012). Hidden Treasures & Secret Lives. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-14914-6.