சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம்
சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம் ( சும்பி சுர்லா என சுருக்கப்பட்டது) 55,495 ஏக்கர்கள் பரப்பளவைக் கொண்ட வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள குசாப் மாவட்டம் மற்றும் சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1978-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மேலும் பல யூரியலின் அச்சுறுத்தல் இனங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக இந்த வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது.[1]
சும்பி சுர்லா வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | சக்வால், பஞ்சாப், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 32°40′12.15″N 72°19′48.02″E / 32.6700417°N 72.3300056°E |
பரப்பளவு | 559.45 km2 (216.00 sq mi) |
ஏற்றம் | 2,475 அடி (754 m) |
நிறுவப்பட்டது | 1978 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு சரணாலயம் மற்றும் பூங்காக்கள் துறை, பஞ்சாப் (பாக்கித்தான்) மாநில அரசு |
வாழ்விடம்
தொகுஇப்பகுதி காப்புக்காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 460-1050 மீ இடையே உள்ளது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு 4994 மிமீ ஆகும், வெப்பநிலை 10-40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வறண்ட துணை வெப்பமண்டல பசுமை மாறாத் தாவரங்களைக் கொண்ட புதர்க்காடுகளை ஆதரிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Species : Protected Area : Chumbi-Surla Wildlife Sanctuary", worldspecies.org, பார்க்கப்பட்ட நாள் 2023-11-18