சும்மாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தலையில் சுமை தூக்கும்போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பர். இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணி சும்மாடு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவர். சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று வழங்குகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- சும்மாடு - ஆறாந்திணை பரணிடப்பட்டது 2008-11-20 at the வந்தவழி இயந்திரம்