சுரபி வாணி தேவி
சுரபி வாணி தேவி (Surabhi Vani Devi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கல்வியாளர், கலைஞர் என பன்முகங்களில் இயங்குகிறார்.[1] 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகளாக அறியப்படுகிறார். மார்ச் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் மகபூப்நகர்-ரங்காரெட்டி-ஐதராபாத்து பட்டதாரி தொகுதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]
சுரபி வாணி தேவி Surabhi Vani Devi | |
---|---|
மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)]] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மார்ச்சு 2021 | |
முன்னையவர் | என். இராமச்சந்தர் ராவ் |
தொகுதி | மாநிலச் சட்டமன்ற மேலவை(இந்தியா), மகபூப்நகர்-ரங்காரெட்டி-ஐதராபாத்து பட்டதாரிகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1952 வங்காரா, வாராங்கல் நகர்ப்புற மாவட்டம்]], ஐதராபாத்து மாநிலம், இந்தியா (தற்பொழுது தெலங்காணா) |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
பெற்றோர் |
|
உறவினர் | பி.வி. இராச்சேசுவர் ராவ் (சகோதரர்) |
வாழிடம் | ஐதராபாத்து (இந்தியா) |
கல்வி | இளங்கலை (உசுமானியா பல்கலைக்கழகம்) நுண்கலைகளில் பட்டயம்(சவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்) |
வேலை | அரசியல்வாதி, கல்வியளர், கலைஞர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுவாணி தேவி இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு 1 ஏப்ரல் 1952 அன்று இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் வங்காரா கிராமத்தில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை ஐதர்குடா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் , சவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் நுண்கலை பட்டயப் படிப்பையும் முடித்தார். 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார் [3]
கல்வி நடவடிக்கைகள்
தொகுவாணி தேவி கடந்த 35 ஆண்டுகளாக ஒரு கலைஞர், கல்வியாளர், சமூக ஆர்வலராக இருந்துள்ளார். சிறீ வெங்கடேஸ்வரா குழும நிறுவனங்களை நிறுவி முதல்வராக பணிபுரிந்தார்.[4] 1991 ஆம் ஆண்டில் சுரபி கல்வி சங்கம், சிறீ வெங்கடேசுவரா நுண்கலை கல்லூரியை நிறுவினார்.
ஒரு கலைஞராக
தொகுஅவர் ஒரு கலைஞர், அவருக்கு விருப்பமான பாடம் இயற்கை மற்றும் நடுத்தர நீர் வண்ண ஓவியர் என அறியப்படுகிறார்.
விருதுகள்
தொகு- 2016 இல் தெலுங்கானா மாநில அரசால் பன்னாட்டு மகளிர் சாதனை விருது வழங்கப்பட்டது [5]
- பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தால் இவருக்கு பிரதிபா புரசுகார் விருது வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ifthekhar, J. S. (7 September 2015). "Art parallels Nature". தி இந்து. தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/art-parallels-nature/article7625664.ece.
- ↑ Telangana Today, Telangana (20 March 2021). "TRS candidate Vani Devi wins Graduates MLC election". https://telanganatoday.com/trs-candidate-vani-devi-wins-graduates-mlc-election.
- ↑ Ali, Roushan (22 February 2021). "KCR picks PV Narasimha Rao’s daughter Vani for Hyderabad-Ranga Reddy-Mahbubnagar MLC poll | Hyderabad News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/kcr-picks-pvs-daughter-vani-for-hyd-rr-mnagar-mlc-poll/articleshow/81143726.cms.
- ↑ correspondent, dc (22 February 2021). "KCR names P V Narasimha Rao’s daughter Vani Devi as MLC candidate" (in en). Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/politics/210221/kcr-names-pvs-daughter-vani-devi-as-mlc-candidate.html.
- ↑ "TRS fields Surbhi Vani Devi, daughter of former PM PV Narasimha Rao, for MLC polls". 22 February 2021. https://www.thenewsminute.com/article/trs-fields-surbhi-vani-devi-daughter-former-pm-pv-narasimha-rao-mlc-polls-143911.
- ↑ "Photos: Painting Exhibition by P.V.Narasimha Rao's Daughter Smt. S. Vani Devi at Salar Jung Museum, Hyderabad". பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.