சுரயா பள்ளிவாசல்
சுரயா பள்ளிவாசல் (Suraya Mosque) (எசுப்பானியம்: Mezquita Suraya) மெக்சிகோ நாட்டின் கோஹுயுலா மாநிலத்தில் தொற்றெயொன் நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1989 இல் கட்டப்பட்டது.[1] இங்கு வரும் அதிக நபர்கள் சியா இசுலாம் பிரிவை சார்ந்தவர்கள்.[2]
சுரயா பள்ளிவாசல் | |
---|---|
சுரயா பள்ளிவாசல் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மெக்சிக்கோ |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | மெக்சிகோ |
மாநிலம் | கோஹுயுலா |
மாவட்டம் | தொற்றெயொன் |
நிலை | செயல்பாடில் உள்ளது. |
வரலாறு
தொகு20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து மெக்சிகோ நாட்டின் கோஹுயுலா மாநிலத்தில் தொற்றெயொன் நகருக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வணிக நோக்கில் பலர் குடியேறியது ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு குடியேறியவர்களின் வழித்தோன்றல்களில் சுமார் 35 இசுலாமியர்கள் 1983 இல் ஹசன் செயின் சாமுத் என்பவரது வீட்டில் மத சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.ஹசன் செயின் சாமுத் பிற்காலத்தில் மதத் தலைவர் ஆனார்.[3]
சொற்பொழிவுகளில் கலந்து கொண்ட இலியாஸ் செர்ன் சலீம் என்பவரே முதலில் அங்கு பள்ளிவாசல் கட்ட ஆலோசனை வழங்கினார்.இப்பள்ளிவாசல் 1986 இல் ஆரம்பித்து 1989 இல் கட்டி முடிக்கப்பட்டது. [2]
இப்பள்ளிவாசல் பென்சில் வடிவ மினார் கொண்டுள்ளது . பள்ளிவாசல் வளாகத்தில் மரங்கள் நடப்பட்டு உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Desde Torreón hasta Chiapas: islam en México". Excélsior. 2014-10-04. http://www.excelsior.com.mx/opinion/julio-faesler/2014/10/04/985080.
- ↑ 2.0 2.1 "Espacio 4 - Ramadán en el desierto
de Torreón". www.espacio4.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-12.
{{cite web}}
: C1 control character in|title=
at position 36 (help) - ↑ Coah., Yohan Uribe Jiménez. "El Islam en La Laguna, una tradicional minoría religiosa". El Siglo de Torreón. https://www.elsiglodetorreon.com.mx/noticia/370890.el-islam-en-la-laguna-una-tradicional-minoria.html.